இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்ந்து நிரூபிக்க வேண்டும்: புதிய கடப்பாடு
கனடாவில் வசிப்பதற்காக போலியாக திருமண பந்தத்தில் இணைந்து கனடா சென்றதும் பிரந்துவிடும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வந்த சட்டமொன்று கனடாவிற்கு திருமணம் செய்து புதிதாய் செல்பவர்களிற்கு தேனிலவுக்காலம் இரண்டு வருடங்கள் என்ற வரையறைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த மாதம் 25ம் திகதிப் பிற்பாடு கனடாவில் வதிவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அனைவருக்கும் பொருந்தும் இச் சட்டத்தின் பிரகாரம் திருமண முடித்து கனடா வருபவர்களிற்கு இரண்டு வருடங்களுக்கு “கட்டுப்பாடுகளுன் கூடிய” [Conditional] நிரந்தர வதிவுரிமை வழங்கப்படும்.
திருமணம் முடித்து இரண்டு வருடங்களிற்குள்; உள்ளவர்களும், பிள்ளைகள் பெறாமல் இருப்பவர்களும் கனடாவில் வதியும் கணவனால் அல்லது மனைவியால் பொறுப்பேற்கப்படுமிடத்து அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நிரந்தரவதிவுரிமை வழங்கப்படும் நாளிலிருந்து இரண்டு வருங்களிற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய வாசிகளாகவே கனடாவில் வதிய வேண்டும்.
இவர்கள் இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தவிர மற்றைய சகல உரிமைகளும் ஏனைய நிரந்தரவதிவிடக்காரர்களிற்கு உள்ளது போல இவர்களுக்கும் உண்டு. எந்தவிதத் தடையுமில்லாம் இவர்கள் வேலை செய்வது, கல்வியைத் தொடர்வது, சமூகநலன்களைப் பெறுவது எனச் சகல உரிமைகளும் இவர்களிற்கு உண்டு.
http://www.cic.gc.ca/english/department/media/backgrounders/2012/2012-10-26a.asp
இவர்கள் அரசின் எதிர்பார்பிற்கேற்ப இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழாவிட்டால் வெளிநாட்டிலிருந்து வந்தவரின் நிரந்தர வதிவுரிமை இரத்து செய்யப்படும் என்பதோடு பொறுப்பேற்றவரே தனது துணைக்காக முழுச் செலவையும் செய்யவேண்டும். இதேவேளை குடிவரவுத் திணைக்களம் எதற்காகப் பிரிவு ஏற்பட்டது, உண்மையான காரணம் என்வற்றைக் கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளும் உரிமையையும் கொண்டுள்ளது.
மறுபுறமாக இவ்வாறு பொறுப்பேற்றலில் கனடாவிற்கு வருபவர் ஏதாவது குடும்ப வன்முறைகளிற்கோ அல்லது பொறுப்பேற்றவரால் எந்தவித அழுத்தத்திற்கோ உள்ளாக்கப்பட்டால் அவர் பொறுப்பேற்றவரைப் பிரிந்து கனடாவில் இருப்பதற்கும் சட்டம் இடமளிக்கிறது. இவ்வாறன வன்முறைகளோ அழுத்தங்களோ கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் பொறுப்பேற்றவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் திண்ணம்.
எனவே இச்சட்டம் புதிதாய் வருபவரை மிகவும் பாதுகாக்கிறது. அவர்களிற்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் கொடுக்கிறது. அதேவேளை கனடாவிலிருந்து பொறுப்பேற்றவர் மரணமடைந்தாலும் கட்டுப்பாடுடைய நிரந்தர வதிவிடப் பிரஜை கனடாவிலிருக்க அனுமதிக்கப்படுவார். ஆனால் பொறுப்பேற்றவர் மரணமடையும் போது இருவரும் நல்லுறவில் இருந்தால் மாத்திரமே இது செல்லுபடியாகும்.
ஆக மொத்தம் போலிக் கல்யாணங்களை நிறுத்த கொணரப்படும் ஒரு சட்டம் உண்மையாகத் திருமணம் செய்து வாழ்வியலில் இணையும் புதுமணத்தம்பதிகளை இரண்டு வருடங்கள் புரிதலுடன் “நான் பாதி, நீ பாதி கண்ணே” என வாழவைத்து நீடுழி நலமோடு வாழ வழியமைத்துக் கொடுக்கிறது.
கனடா மிரர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக