பாடகி சின்மயிக்கு ஃபேஸ்புக்கில் கண்டம் வந்தது (அல்லது, சின்மயியால் மற்றையவர்களுக்கு கண்டம் வந்ததா?) இப்போது, அடுத்த சினிமாக்காரரை பற்றி பேஸ்புக்கில் பரபரக்கிறார்கள். இப்போது, ஃபேஸ்புக்கில் சீரியசாக விவாதத்தில் அடிபட்டு கொண்டிருக்கும் தமிழ் சினிமா நபர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.
இது என்ன விவகாரம்?
ஈழத் தமிழர் விவகாரம் இது. “நவம்பர் மாதம் முழுவதும் எந்த கொண்டாட்டமும் இருக்கக் கூடாது. அது ஈழத் தமிழர்களின் துக்க மாதம்” என்று ஆர்.கே.செல்வமணி அறிக்கை விட்டாரல்லவா? கனடாவில் இம்மாதம் நடைபெறவிருந்த இளையராஜாவின் கச்சேரியை முடக்க துடித்து விடப்பட்ட அறிக்கை அது.
கடல் கடந்து கனடாவிலேயே துக்கம் கொண்டாட துடிக்கும் செல்வமணி, சொந்த நாட்டில் நவம்பர் மாதம் முழுவதும் எவ்வளவு துக்கமாக இருப்பார் என்று பார்க்க போனவர்களுக்கு, அவரது அன்பு மனைவி ரோஜா கடந்த சில வாரங்களாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் விஷயம் கண்ணில் பட்டு தொலைத்துவிட்டது.
அதுவும், பரத நாட்டியமா என்றால், இல்லை. குத்தாட்டம்.
நாட்டுக்கே அட்வைஸ் பண்ணும் செல்வமணி, வீட்டுக்கு அட்வைஸ் பண்ணவில்லையா என்று சர்ச்சையை சிலர் ஃபேஸ்புக்கில் கிளப்பிவிட, அது பற்றிக் கொண்டிருக்கிறது.
“யார் யாரையோ துக்கம் கடைபிடிக்க வற்புறுத்தும் செல்வமணி, இந்த கொடுமை தாங்காமல், மனைவிக்கு எதிராக வீட்டில் உண்ணாவிரதம் இருக்கிறாரோ?” என்றும் கேட்கிறது அந்த ஃபேஸ்புக் விவாதம்.
செல்வமணி வட்டாரங்களில் விசாரித்தபோது, “அப்படி ஒரு சர்ச்சை அடிபடுவது எங்களுக்கும் தெரியும். ஆனால், அதற்காக மாதம் முழுவதும் சும்மா இருக்க முடியுமா? நவம்பர் மாதத்தில் கனடாவில் துப்பாக்கி, போடாபோடி எல்லாம் ரிலீஸ் ஆகவில்லையா? அதை பார்த்தவர்களில் முக்கால்வாசி பேர் ஈழத்தமிழர்தானே” என்கிறார்கள்.
“அப்படியானால், இளையராஜாவின் “ஜனனி ஜனனி”யை விட போடாபோடியில் சிம்புவின் “போட்டுதாக்கு டன்டனக்கா… வாடி பொண்டாட்டி கலாசலா” சோக பீலிங் கொடுக்கிறதா?” என்று கேட்டபோது, செல்வமணி தரப்பில் இருந்து வந்த பதில், “இளையராஜா ஈழத் தமிழருக்கான என்ன செய்தார்?” என்பது!
ஒருவேளை ஈழத் தமிழருக்கு சிம்பு நிறைய செய்திருக்கிறாரோ, என்னவோ!
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக