ஞாயிறு, 2 டிசம்பர், 2012

இப்படியும் நடந்ததா?

கணவனின் கடனை வசூலிக்க மனைவியை அறையில் பூட்டி வைத்த வங்கி அதிகாரிகள்

வடபகுதியிலுள்ள ஓர் அரச வங்கியில் கடன் பெற்றிருந்த விவசாயி ஒருவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது அவதியுற்றிருந்த வேளையில் அவ்விவசாயியின் வீட்டிற்குச் சென்ற அக்குறிப்பிட்ட வங்கியின் அதிகாரியொருவர் அவரையும், அவரது மனைவியையும் வங்கி முகாமையாளர் அழைத்துவருமாறு கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் முகாமையாளரும் அழைத்துச் சென்ற அதிகாரியுமாக விவசாயியின் மனைவியை வங்கியின் அறையொன்றினுள் தனியாக அழைத்துச் சென்று அமர்ந்துகொள்ளுமாறு பணித்து அந்த அறையைப் பூட்டிவிட்டு வெளியேறிவந்து வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

வங்கி அதிகாரிகளின் இச்செய்கையால் அதிர்ச்சியுற்ற விவசாயி செய்வதறியாது வெளியே வந்து ஐந்து உறவினர்களிடம் நிலைமையை விளக்கி பணத்தைச் சேகரித்து வங்கியில் செலுத்தி மனைவியை மீட்டுச் சென்றுள்ளார்.

கடன்பட்டுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்போருக்கு இது ஒரு படிப்பினை தரும் செய்தி எனினும் மனித உரிமையை மீறும் ஒரு செயலாகவே பலரும் இதனைக் கருதுகின்றனர்.

மனித உரிமைகள் வாரத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல