ஞாயிறு, 2 டிசம்பர், 2012

புதுக்குடியிருப்புச் சமர், வெளிவராத உண்மைகள்! (காணொளிகள் இணைப்பு)

இறுதி யுத்தத்தின்போது புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாறு காணாத தோல்வியை எதிர்கொண்டனர்.

பல தளபதிகள் உட்பட ஏராளமான புலிகள் புதுக்குடியிருப்புப் பெருஞ்சமரில் மடிந்தனர். 525 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. இறந்த புலிகளை அடையாளம் காண்கின்றமைக்காக விசேட நிபுணர்கள் கொண்ட இராணுவ புலனாய்வுக் குழு கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்புக்கு வந்து சேர்ந்தது. தீபன், கீர்த்தி, ரூபன், நாகேஸ், கடாபி, விதுஷா, துர்க்கா, கமலினி போன்ற மூத்த தளபதிகளின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆயினும் இம்மாபெரும் தோல்வி புலித் தலைமையால் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அத்துடன் புலிச் சார்பு ஊடகங்கள் கள நிலைமையை முற்றிலும் தலை கீழாகவே சித்திரித்தன.

ஆயினும் இறந்தவர்கள் குறித்த தகவல்கள் நெருக்கமான உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டன. கேணல் தீபனின் சகோதரன் கனடாவில் உள்ளார். இவருக்கு தீபனின் மரணம் குறித்து புலித் தலைவர் ஒருவரால் தொலைபேசியில் அறிவிக்கப்பட்டது. கேணல் தீபனின் மறைவு புலிகளுக்கு பேரிழப்பு. புலிகள் இயக்கத்துக்குள்ளே சிறந்த போராளி என்று பெயர் எடுத்தவர்.கிளிநொச்சியில் கண்டாவளையைச் சேர்ந்தவர். வட போர் முனையின் ஒட்டுமொட்ட கட்டளைத் தளபதி. சிவதீபன் தவபாலசிங்கம் என்பது இவரது சொந்தப் பெயர்.

ஜயந்தன் தரைப் படை அணியின் விசேட தளபதி கீர்த்தி. இதே படை அணியின் தளபதி நாகேஸ். கீர்த்தியின் சொந்தப் பெயர் மாணிக்கப்பொடி மஹேஸ்வரன். மட்டக்களப்பில் அரசடித்தீவைச் சேர்ந்தவர். கிழக்குக்கான புலனாய்வுப் பொறுப்பாளராக முன்பு பணியாற்றியவர்.

நாகேஸின் சொந்தப் பெயர் செல்வரட்ணம் சுந்தரம். சொந்த இடம் பெரிய போரத்தீவு. மட்டக்களப்பு மாவட்ட இராணுவ தளபதியாக முன்பு பணியாற்றியவர்.

பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலராக ஒரு காலத்தில் இருந்தவர் கடாபி. இவருக்கு விடுதலை, அமுதன் ஆகிய பெயர்களும் உண்டு. இம்ரான் - பாண்டியன் படையணியின் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். ராதா படையணித் தளபதி சிலம்பரசன், அதே படையணியின் பிரதித் தளபதி அன்பு ஆகியோரும் கொல்லப்பட்டனர். பொன்னம்மான் சுரங்கப் படையணியின் தளபதி அஸ்மி, கிட்டு எறிகணைப் பிரிவின் தளபதி மணிவண்ணன், கோபால் மோட்டார் படையணியின் தளபதி குட்டி சிறி போன்றவர்களும் கொல்லப்பட்டனர்.

தமிழ்ச்செல்வனின் அரசியல் துறையில் பிரதித் தலைவராக இருந்த தங்கனும் கொல்லப்பட்டு இருக்கின்றார் என ஊர்ஜிதம் அற்ற தகவல்கள் கூறுகின்றன. பஞ்சன், ஆதித்யன், சித்திராஞ்சன் போன்ற தளபதிகளும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மூத்த கடல் புலி மஹிந்தனும் கொல்லப்பட்டு இருக்கின்றார் . மாலதி படையணியின் தலைவியாக இருந்தவர் விதுஷா. சோதியா படையணியின் தலைவியாக இருந்தவர் துர்க்கா. சார்ள்ஸ் அன்ரனி தரைப் படையின் விசேட தளபதி அமுதாப், அதே படையணியின் விசேட தளபதி கோபிநாத் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

புலித் தளபதிகளில் ஐம்பதுக்கும் அதிகமானோர் படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்களின் விபரங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்த முடியாது உள்ளது.

கேணல் பானு காயப்பட்டார். தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி சிறிய காயங்களுடன் தப்பினார். தளபதி சொர்ணம் பலத்த காயங்களுக்கு உள்ளானார். தளபதி லோரன்ஸும் சிறிதாக காயப்பட்டார்.

130 மில்லி மீற்றர் எறிகணைகள், 81 மில்லி மீற்றர் மோட்டார்கள் ஐந்து, 7 மீற்றர் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் .... என ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

குடிதண்ணீர், உணவு, மருந்து, தோட்டாக்கள் இல்லாமல் புலிகள் பெரிதும் அவதிப்பட்டார்கள்.

புதுக்குடியிருப்புச் சமரின்போது நேரடியாக எடுக்கப்பட்ட யுத்தக் காட்சிகளைக் காணொளியில் பாருங்கள்.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல