வியாழன், 13 டிசம்பர், 2012

மார்பகத்தை அறுத்து போதைப்பொருளை உள்ளே வைத்து கடத்தி வந்த பெண் கைது

பனாமா நாட்டிலிருந்து பார்சலோனா வந்த விமானத்தில், மிடுக்காக உடையணிந்த, நவநாகரிக பெண் ஒருவர் வந்திறங்கினார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பெண்ணின் உடமைகளை சோதனையிட்டபின், அவளது உடலையும் சோதனையிட்டனர்.

அப்போது, அவளது மார்பகத்தில் புதிதாக தையல் போட்ட தழும்புகளும், தழும்புகளில் இருந்து ரத்தம் கசிவதையும் கண்டு, காரணம் கேட்ட போது, மார்பகங்களை கவர்ச்சியாக வெளிப்படுத்துவதற்காக, சமீபத்தில் ஆபரேஷன் செய்துக் கொண்டதாக அந்த பெண் கூறினார்.

அவளது பேச்சில் சந்தேகப்பட்ட போலீசார், அவளது வாக்குமூலம் சரிதானா? என்பதை கண்டுபிடிக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்
சென்று டாக்டர்களை வைத்து பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில், அறுவை சிகிச்சை மூலம் தனது இரு மார்பகங்களிலும் ‘கொக்கைன்’போதைப்பொருளை அவள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது’.

இதையடுதது, அந்த பெண் மீது போதைப்பொருள் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவளது மார்பகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 380 கிராம் எடையுள்ள 2 பாக்கெட் கொக்கைன்-ஐ பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல