தனது குடும்பத்தின் பொருளாதாரத்தையும், தேசிய பொருளாதாரத் தையும் கட்டியெழுப்புவதற்குத் தன்னாலான மிகச் சிறிய பங்களி ப்பையாவது கொடுக்கும் அதி உன்னத நோக்கத்துடன் சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற றிஷானா நபீக் தன்னை அறியாது செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்குத் தண்டனை யாகத் தனது உயிரையே தியாகம் செய்த தேசப்பற்றுடைய பெண் ணாக உயர்ந்து தனது மறைவினால் ஆறாத்துயரத்தில் மூழ்கியுள்ள இந்நாட்டு மக்களின் இதயங்களில் நிரந்தரமாகக் குடியமர்ந்துள்ளார்.
இனிமேல் அரசியல்வாதிகளை றிஷானா குடும்பத்தினர் நம்பியிருக்க முடியாது. அரசாங்கமே முன்வந்து றிஷானா அநாதைகளாக விட்டுச் சென்ற அவரது வயோதிபப் பெற்றோரையும் இளம் சகோதரிகள் இரு வரையும் பணக்கஷ்டம் இன்றி வாழவைப்பதற்கு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். றிஷானாவின் குடிசை வீட்டை மாடிவீ டாக மாற்றாவிட்டாலும் இந்தக் குடும்பத்தினர் நிம்மதியாக வாழ்வத ற்கு ஒரு வசதியான சிறிய வீட்டையாவது கட்டிக்கொடுக்க வேண் டும்.
றிஷானாவின் மறைவை அடுத்து வழமையாக ஒருவரின் துன்பத்தில் விளம்பரம் தேட எத்தனிப்போருக்கு இந்தத் தடவை நம்நாட்டு ஊட கங்கள் ஆதரவளிக்காமல் அவர்களின் அனுதாபச் செய்திகளை வெளி யிடுவதற்குத் தயக்கம் காட்டியது வரவேற்கத்தக்க செயலாகும். இவ் விதம் அனுதாபச் செய்திகளை வெளியிடுவதில் ஆர்வம் உடையவர் கள் அதற்குப் பதிலாக வலது கை செய்வது இடது கைக்குத் தெரி யாதவகையில் விளம்பரம் எதுவும் இன்றி றிஷானாவின் குடும்ப த்தை நாடிச் சென்று அவர்களுக்கு சகலவிதமான உதவிகளைச் செய் வதே றிஷானாவின் மறைவுக்கு அவர்கள் தெரிவிக்கும் சிறந்த அனு தாபமாக அமையும் என்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகின் றோம்.அமைச்சர் டிலான் பெரேரா, றிஷானாவின் குடும்பத்தை அரசாங்கம் காப்பாற்றத் தயங்காது. அவர்களுக்கு விரைவில் உதவி செய்யும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்த வாக்குறுதியை நாம் மனப்பூர்வ மாக நம்புகின்றோம். விரைவில் இந்த அப்பாவிக் குடும்பத்துக்கு அரசாங்க உதவி கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின் றோம்.
றிஷானாவின் மறைவு எங்கள் நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி அரசாங் கத்துக்கும் அது ஒரு சிறந்த அபாய அறிவிப்பாக அமைந்துள்ளது. தங்கள் குடும்பங்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெளிநாடு செல் லும் திருமணமான திருமணமாகாத நூற்றுக்கணக்கான பெண்கள் இறு தியில் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை யில் சவப்பெட்டிகளிலேயே நாடு திரும்புவதையும் மேலும் பலர் சக் கர நாற்காலிகளில் அநாதைகளாகத் திரும்புவதையும் நாம் நாளாந்தம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதுமட்டுமன்றி வெளிநாடுகளில் வேலை செய்வதற்காகச் செல்லும் எமது திருமணமான பெண்களின் பிள்ளைகளின் வாழ்க்கை இந்தப் பெண்கள் நாடு திரும்பும் போது சீர்குலைந்துபோய் கல்வி அறிவற்ற வர்களாக வெறுமனே வீதிச் சிறுவர்களாக அல்லல் பட்டுக்கொண்டி ருப்பதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
இன்னும் பல பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீட்டாரு க்கு அனுப்பும் போது, அந்தப் பணம் எதற்கும் பயன்படாத வகை யில் வீண்விரயம் செய்யப்படுவதையும் அவர்களின் கணவன்மார் குடித்துக் கும்மாளம் அடித்து வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நட த்தும் அவலத்தையும் நாம் பார்த்திருக்கின்றோம். இதுபற்றி ஒட்டு மொத்தமாக நாம் கூறுவதாயின் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களா கச் செல்லும் பெண்களில் சுமார் 5 வீதத்துக்கும் குறைந்தவர்களின் வாழ்க்கை மாத்திரமே மலர்ந்திருக்கின்றது என்ற வேதனைக்குரிய உண்மையை நாம் வெளியிட வேண்டி இருக்கிறது.
இவற்றை நாம் நன்கு ஆராய்ந்து பார்க்கும் இடத்து நம் நாட்டுப் பெண் கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது அவசி யம்தானா என்ற கேள்விக்குப் பொருத்தமான ஒரு விடையைக் காண் பது அவசியமாகின்றது. நம்நாட்டுப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுக ளுக்கு பணிப்பெண்களாகச் செல்லாவிட்டால் அவர்களின் குடும்பங் பள் வறுமை காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று பலர் வாதிக்கலாம். அந்த வாதத்தில் ஓர ளவு உண்மை இருந்தாலும் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக நம் நாட்டுப் பெண்கள் பணிபுரிவது அவர்களுக்கு தீமையைத் தவிர நன் மையை ஏற்படுத்தாது என்ற உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்விதம் கஷ்டப்படும் பெண்களின் குடும்பங்களுக்கு அவர்கள் வெளி நாடு சென்று சம்பாதிக்கும் அளவு பெருமளவு வருமானத்தைப் பெற் றுக்கொடுக்கா விட்டாலும் அவர்கள் நிம்மதியாக தங்கள் குடும்பத்தா ருடன் வாழ்வதற்கு வகை செய்யக்கூடிய முறையில் இந்தப் பெண்க ளுக்கு வாழ்வாதாரங்களை நம் நாட்டில் செய்துகொடுக்க வேண்டும்.
குடும்பத் தலைவிகளான பெண்களுக்கு சுயவேலை வாய்ப்புகளை ஆர ம்பிப்பதற்கும், குடிசைக் கைத்தொழில் மூலம் கைப்பணிப்பொருட்க ளைத் தயாரிப்பதற்கும், சிறிய கடைகளை வைத்து வியாபாரம் செய் வதற்கும் அரசாங்கம் சிறிய அடிப்படையிலான சலுகைக்கடன்களை இந்தப் பெண்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். சுனாமி மற் றும் யுத்த அனர்த்தத்தினால் அநாதைகளாகி உள்ள குடும்பத் தலை விகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்படும் இதுபோன்ற கடன் உதவி களை வறுமை நிலையில் உள்ள சகல குடும்பப் பெண்களுக்கும் நாம் பெற்றுக்கொடுத்தால் எமது பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்று துன்பப்படும் அவலம் ஏற்படாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக