நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலொன்றை ஓட்டிச் சென்ற பெண்ணொருவர் செய்வதறியமால் அதனை வீட்டு மனைத்தொகுதியொன்றின் மீது மோதிய சம்பவமொன்று சுவீடன் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது.
சுவீடன் நாட்டு தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று காலை புறநகர் செல்லும் மின்சார ரயில் நின்று கொண்டிருந்தது.
அந்த ரயிலில் பயணிகள் யாரும் ஏறி அமர்ந்திருக்காத நிலையில் திடீரென அந்த ரெயில் ஓடத் தொடங்கியது.
சுமார் 20 வயது இளம் பெண் ஒருவர் அந்த ரயிலை ஓட்டிச் செல்வது தெரிந்தது.
இதை கண்டதும் ரயில் நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த ரயில் மின்னல் போல வேகமாக சென்று விட்டது. பயங்கர வேகத்தில் சென்ற அந்த ரயிலை அந்த பெண்ணால் நிறுத்த முடியவில்லை.
ஸ்டாக்ஹோம் புறநகர் பகுதியில் ஒரு வளைவில் திரும்பும்போது பயங்கர வேகம் காரணமாக அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி ஓடியது.
அடுத்த நிமிடம் அங்கிருந்த ஒரு வீட்டு மனைத் தொகுதியொன்றில் ரயில் பாய்ந்தது. வீட்டின் உள்பகுதி வரை புகுந்து மோதி ரயில் நின்றது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த ரயில் கடத்தல், மோதல் சம்பவம் சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது.
ரயில் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்தனர். வீட்டுக்குள் மோதி கிடந்த ரயிலில் அந்த இளம்பெண் படுகாயங்களுடன் போராடியபடி கிடந்தார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அந்த பெண், தனியார் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் என்று தெரிய வந்தது.
அவரிடம் ரயில் சாவி எப்படி கிடைத்தது அவர் ஏன் ரயிலை கடத்தி சென்றார்? என்று தெரியவில்லை. அவர் மின்னல் வேகத்தில் ரயிலை இயக்கியது ரயில்வே அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் ரயிலை மோத விட்ட வீட்டில் 5 முதியோர்கள் வசித்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக