வியாழன், 17 ஜனவரி, 2013

பெண்களே உஷார்!!


அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்

அன்றாட வாழ்வில் பல பெரிய நெருக்கடிகளை சூழ்நிலைகளும் அது சார்ந்த தன்மைகளுமே நமக்கு உருவாக்கிவருகிறது. தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்ட உணர்வும் உள்ளுக்குள்!

குடும்பத்துடன் சுற்றுலா சென்றால் கணவன்-மனைவி சுதந்திரமாக எதுவேண்டுமானாலும் செய்யமுடியுமா? சில துணிக்கடையில் பெண்/ஆண் துணிமாற்றுவதை கூட படம்பிடிக்கிறார்கள். இது தான் இன்றைய சூழலா?

ஹோட்டல் அறைகளில் சுதந்திரமாக இருக்க முடியுமா?. இவ்வளவு ஏன் சில பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பேருந்துகளில் கூட சுதந்திரமும் பாதுகாப்புகளும் குறைக்கப்பட்டும்,பரிக்கபட்டும் உள்ளதே?

நிம்மதியா குளிக்க முடியல, தூங்க முடியல. என்னய்யா உலகம் இது?

கேமராக்கள் மிகவும் துல்லியமான தரத்துடனும் அளவுகளில் சிறியதாகவும் இருப்பது பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

மேலுள்ள கேள்விகளுக்கு விடை என்ன தெரியுமா? நமது அலட்சியமும் விழிப்புணர்வு இல்லாமையுமே. உண்மைதானே?. மேலும் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் நடப்புகளை முன்வைத்து இதை தொடருகிறோம். இந்த பதிவு நல்ல நோக்கங்களுக்காக எழுதப்பட்டது.

பீப்ஹோல் ரிவர்சர்:

பீப்ஹோல் என்பது பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுவது. ஹோட்டல் அறைகளிலும் இதுபோன்ற கருவி பொருத்தபட்டிருக்கும். வெளியில் நிற்பவர் யார் என்பதை எளிதில் பார்பதற்கு இது பயன்படுகிறது.

‘பீப்ஹோல் ரிவர்சர்’ என்பது ஒரு வீடியோ கேமராவாகவும் பயன்படுத்தபடுகிறது. இது எளிதாக கதவுகளில் பொருத்தபடுகிறது. அறையில் உள்ளேயும்,வெளியேயும் எளிதில் படம்பிடித்துவிடும்.

இது படம்பிடிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்:

துணிய போட்டு மூடுங்க! அல்லது சூயிங்கம் போன்ற ஒட்டும் வகையிலானதை பயன்படுத்தி அதை மறைத்து விடுங்கள். வேறு ஏதாவது ஐடியா இருந்தால் கமென்ட் பண்ணுங்க.


ஸ்க்ரூ கேமரா:

பார்த்தவுடன் மிகவும் அதிர்ச்சியளுக்கும் வகையிலாக இருந்தது. சாதாரணமாக எல்லா இடங்களிலும் உபயோகிக்கப்படும் ‘ஸ்க்ரூவில்’ கேமரா இருந்தால் என்னதான் செய்வது?

இந்த வகை கேமராக்களை டிவி, டேபிள், கட்டில், கதவு என எல்லா இடங்களிலும் எளிதில் பொருத்திவிடமுடியும்.கண்டிப்பாக இதுபோன்ற கேமராக்களை கண்டறிவது மிகவும் கடினமானதே.

சற்று பெரிதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் ‘ஸ்க்ரூக்களை’ உடைத்தே விடுங்கள்.

வேற ஐடியா இருந்தால் நீங்களே சொல்லுங்க!

பேனா மற்றும் கண்ணாடி கேமரா:

ஆங்கில திரைப்படங்களில் காட்டுவதைப்போல பேனா மற்றும் கண் கண்ணாடியிலும் கேமராக்கள் வைத்து வேவுபார்க்கிறது வக்கிர வர்க்கம். சில அறைகளில் சாதாரணமாக கிடக்கும் பேனா போன்றவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்.

இவையிரண்டும் வீடியோ ரெகார்ட் செய்து உடனுக்குடன் இணைப்பில்லாத இணையம் வாயிலாகவும் அனுப்பக்கூடியது. இதன் தரம் திரைப்படங்கள் எடுக்கும் அதிநவீன கேமராக்களுக்கு சமம் என்பதை நினைவில்கொள்க.

ஃபைபர் கேமரா:

ஃபைபர் கேபிள் என்ற இணைப்புகளுக்கு பயன்படுத்தும் அதிநவீன தரவுகள் பரிமாறும் ஒயரால் ஆனா கேமரா இது. இந்த வகை கேமராக்கள் எந்த சிறிய இடத்திலும் நுழையக்கூடியது. மேலும் குளிர்சாதன பெட்டி, ஃபேன் மற்றும் மின் விளக்குகளில் கூட இதை எளிதில் பொருத்தமுடியும்.

அதேபோல் இதன் துல்லியமும் மிகவும் அசாத்தியமானது. இது இணைப்பில்லாமல் பயன்படுத்த முடியாது. எனவே சற்று முயற்சி செய்தால் கண்டுபிடிப்பது எளிதே!

நைட் விஷன் கேமரா:

இந்த கேமரா இரவின் இருள் தருணங்களில்கூட தெளிவாக படம்பிடிக்கும் தன்மையுடையது. இதன் தரமும் துல்லியமும் மிகவும் அபாரம். இருட்டில் உள்ளதையும் சாதாரண படங்கள்போலவே இந்த கேமராவால் படம்பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது அளவில் பெரியதாக இருப்பதால் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதுபோன்ற சாதனங்கள் எங்காவது மறைத்துவைத்து படம்பிடிப்பார்கள். முயற்சி செய்தால் மிக எளிது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல