செவ்வாய், 15 ஜனவரி, 2013

பாஸ்வேர்ட்டை அகற்ற

மின்னஞ்சல்களுக்கு யூசர் ஐ.டி. நிரப்பியவுடன், அதன் பாஸ்வேர்ட் தானாக, அதற்கான கட்டத்தில் காட்டப்படுகிறது. அதனை நீக்குவது எளிதுதான். சில பிரவுசர்கள், நீங்கள் தந்துள்ள அனைத்து பாஸ்வேர்ட்களையும் நீக்கும்; சில குறிப்பிட்ட யூசர் நேமிற்கான பாஸ்வேர்டை மட்டும் நீக்கும். கீழே அனைத்து பிரவுசர்களிலும், இதனை செட் செய்வது எப்படி எனத் தருகிறேன்.

1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: பேவரிட்ஸ் ஸ்டார் அடுத்து உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். அடுத்து “Internet Options.” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் general டேப் பிரிவில், பிரவுசிங் ஹிஸ்டரி கீழாக “delete” என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து அனைத்து டிக் அடையாளங்களை நீக்கவும். “passwords” என்பதில் மட்டும் டிக் அடையாளம் இருக்கட்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்த முறை பாஸ்வேர்டை நினைவில் கொள்ளவா எனக் கேட்டு சிறிய விண்டோ வருகையில் “no” என்பதில் அல்லது “never for this site” என்பதில் கிளிக் செய்திடவும்.

2. கூகுள் குரோம்: புக்மார்க் ஸ்டார் அருகே உள்ள நெட்டு பாரில் customize and control Google chrome கிளிக் செய்திடவும். அடுத்து “settings” என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து “advanced settings…” என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், “Managed Saved Passwords.” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு யாஹூ வெப் முகவரியைக் கண்டு, அதன் அருகே உள்ள X அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இதனால், சேவ் செய்யப்பட்ட தகவல் அழிக்கப்படும். அடுத்த முறை, பாஸ்வேர்டை சேவ் செய்திடவா என்ற கேள்விக்கு “no” என்பதில் அல்லது “never for this site” என்பதில் கிளிக் செய்திடவும்.

3. மொஸில்லா பயர்பாக்ஸ்: இடது புறம் மேலாக உள்ள பயர்பாக்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் options menu வில் கிளிக் செய்து, பின்னர் “Options” என்பதில் கிளிக் செய்க. கிடைக்கும் டேப்பில், “Saved Passwords” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு யாஹூ தள இடத்தைக் கண்டு, அதில் “remove” என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் என்பதில் கிளிக் செய்து வெளியே வரவும். அடுத்து பாஸ்வேர்டை நினைவில் கொள்ளவா என்ற கட்டம் கிடைக்கையில், “no” என்பதில் அல்லது “never for this site” என்பதில் கிளிக் செய்திடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல