சனி, 12 ஜனவரி, 2013

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப் பறிகொடுத்து விட்டேன். அந்த வேதனை எனக்கு மாத்திரம் தான் தெரியும் என்று ரிஸானாவின் தயார் பரீனா அழுது கொண்டே தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

ரிஸானாவின் தாயாரை தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

மகளின் செய்தியை அறிந்து கொள்ளும் வரை மகள் வீடு வந்து சேருவாள். அரசாங்கம் இதனைச் செய்யும் என்று நம்பியிருந்தேன். எனது நம்பிக்கை வீணாகி விட்டது. மகளைப் பறிகொடுத்து விட்டேன். மகளுக்காக எல்லோரும் துஆ செய்யுங்கள் என்றார்.

இதேவேளை சுகயீனமுற்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று விடுதலையாகி தனது வீட்டிலிருந்து ஒருமைல் தூரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த ரிஸானாவின் தந்தை நபீக்கிடம் இத்துயரச் செய்தி வியாழக்கிழமையே சொல்லப்பட்டது தற்போது அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவர் ஒரு இருதய நோயாளி என்பதால் இச் செய்தி மிகவும் நிதானமாகவே தெரிவிக்கப்பட்டது என ரிஸானாவின் தயாரின் சகோதரர் எ.எம்.லரீப் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளைமறுதினம் ரிஸானாவின் வீட்டுக்கு சமூகமளிப்பதாக தகவல் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை மூதூரிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்தும் ரிஸானாவின் வீட்டை நோக்கி பெரும் திரளான மக்கள் சமூகமளித்து ஆறுதல் வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல