சனி, 12 ஜனவரி, 2013

ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் தமிழ் பெண் புலிகள்! (படங்கள் இணைப்பு)

தென்னிலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்திருந்த இராணுவ தமிழ் யுவதிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தென்னிலங்கையைச் சேர்ந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருடன் இவர்களுக்கு இங்கு ஒரு விசேட சந்திப்பு ஒழுங்கு பண்ணப்பட்டு இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசி, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய இன ஐக்கியத்துக்கான பாலமாக இச்சந்திப்பு பரிணமித்து இருந்தது.

ஜனாதிபதி செயலகத்தை சேர்ந்த சிரேஷ்ட உதவிச் செயலாளர் சி. என். விதனச்சி பிரதம விருந்தினராக பங்கேற்றார்.

மங்கள விளக்கு ஏற்றலுடன் விழா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம் ஆனது.

திறமைகளை வளர்த்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல், குழுக்களாக செயல்படுதல், அறிவைப் பெறுதல், பரஸ்பர புரிந்துணர்வை வளப்படுத்துதல், தலைமைத்துவ பண்புகளை உரித்தாக்கிக் கொள்ளுதல் போன்ற நல்ல விடயங்களை கற்றுக் கொள்ள இச்சந்திப்பு வழியேற்படுத்திக் கொடுத்து இருந்தது.

தலைமைத்துவ பண்பு குறித்து விசேட விரிவுரை ஒன்றும் இங்கு துறை சார்ந்த நிபுணரால் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் இவ்விழாவில் பங்கேற்று இருந்தனர்.








Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல