விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எப்படியான ஆயுதங்கள் தேவை என சதா விரிவாக விளக்கம் கொடுத்தார். அவரிடம் இருந்து எவ்வளவு தகவல்களை பெற முடியுமோ, அவ்வளவு தகவல்களை பெறுவதற்காக பேச்சு கொடுத்தார் வேஷதாரி ‘ஆயுத வியாபாரி’ CI-1.
அமெரிக்க உளவுத்துறை நினைத்திராத அளவுக்கு, புலிகளைப் பற்றி தகவல்கள் கடகடவென வந்து கொட்டின!
“புலிகளுக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல், கிபிர்கள்தான். அவற்றை அடித்து வீழ்த்த வேண்டும்” என்றார் சதா.
“கிபிர் என்று நீங்கள் குறிப்பிடுவது, இஸ்ரேலிய தயாரிப்பு Kfir விமானங்களை அல்லவா?” என கேட்டு, “ஆம். இஸ்ரேலிய தயாரிப்பு Kfir விமானங்களை வீழ்த்த வேண்டும்” என்ற பதில் சதாவின் வாயாலேயே வந்து பதிவாகுமாறு பார்த்துக் கொண்டார், CI-1.
“இலங்கை விமானப்படை, உங்கள் (புலிகள்) பகுதியில் கிபிர் விமானம் மூலம் தாக்குதல் நடத்துகிறது. அப்படித்தானே”
“ஆம். இலங்கை விமானப்படை விமானங்களைதான் வீழ்த்த வேண்டும். அதற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வேண்டும்”
“சரி. இந்த ஏவுகணைகளை இயக்கப் போவது யார்?”
“வேறு யார்? விடுதலைப் புலிகள்தான்”
“அப்போ, ஏவுகணைகளை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நீங்கள் நேரடியாக வாங்குகிறீர்களா? அல்லது நீங்கள் மூன்றாம் தரப்பா?”
“இல்லை.. இல்லை.. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நேரடியாக நாங்கள் வாங்குகிறோம்”
“ஆயுதங்களை வாங்கித் தருமாறு அவர்கள் (விடுதலைப் புலிகள்) உங்களிடம் கேட்டார்களா?”
இந்தக் கேள்விக்கு உற்சாகமாக பதிலளித்த சதா, “பின்னே.. இல்லையா? நாங்கள் இப்போது இலங்கை சென்று விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டுதானே வருகிறோம். இங்கே ஆயுதம் வாங்குவது தொடர்பாக, பொட்டு அம்மானிடம் இருந்து எமக்கு நேரடி உத்தரவு வருகிறது”
“பொட்டு அம்மான் யார்?”
“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர்”
அத்துடன் இந்த சந்திப்பு முடிந்தது. FBIக்கு அருமையான தகவல்கள் கடகடவென கிடைத்து விட்டன. “மீண்டும் சந்திக்கலாம். சந்திக்கும் தேதி பற்றி தகவல் தருகிறேன். வாருங்கள், ஆயுதங்களை சாம்பிள் பார்க்கலாம்” என்று அனுப்பி வைத்தார், CI-1.
இதையடுத்து, இவர்கள் கனடா திரும்பினர். இவர்கள் அறியாமலேயே FBI இவர்களை பின்தொடர்ந்தது.
இவர்கள் இருவருடைய போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. ஆயுத விவகாரத்தில் இவர்களுடன் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்ற லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, அவர்களும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.
இதற்கிடையே FBIக்கு ஒரு சந்தேகம், இவர்கள் நிஜமாகவே ஆயுதம் வாங்கும் ஆட்கள்தானா என்று ஏற்பட்டது. காரணம், எள் என்பதற்கு முன், எண்ணையாக தகவல்களை கொட்டுகிறார்கள். எந்தவொரு தீவிரவாத அமைப்புக்கு ஆயுதம் வாங்கும் ஆட்களும், இப்படி ‘ரொம்ப’ இன்னசென்டாக இருக்க மாட்டார்கள்.
இந்த சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இவர்களிடம் ஆயுதம் வாங்கும் அளவுக்கு பணம் (சுமார் 1 மில்லியன் டாலர்) உள்ளதா என்று செக் பண்ணுவதற்கு கனேடிய உளவுத்துறையின் உதவியை நாடியது FBI.
அப்போது, இவர்கள் இலங்கை சென்று திரும்பியபின் பெருமளவு பணம், இவர்களது பேங்க் கணக்குகளுக்கு வந்தது தெரியவந்தது.
சதாவுடன் தொடர்பில் இருந்த சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (தற்போது கனடாவில் இருந்து அமெரிக்கா அனுப்பப்பட உள்ளவர்) 2005-ம் ஆண்டு பெற்ற வருட வருமானமே, 24,000 டாலர்கள்தான். ஆனால், 2006-ம் ஆண்டு, திடீரென தமது கிரெடிட் கார்ட்டுக்கு 1 லட்சம் டாலர் பணம் டிப்பாசிட் செய்துவிட்டு, அதில் இருந்து செலவு செய்தார்.
ஒரு எலக்ட்ரோனிக் நிறுவனத்தின் பெயரில் பொருட்கள் வாங்கிய வகையில், 5 வாரங்களில், அரை மில்லியன் டாலர் தொகைக்கு செக்குகள் கொடுத்தார். அவ்வளவு செக்குகளும், அவரது சொந்த வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்ததால், பாஸ் ஆகியது.
இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிழல் அமைப்பு என FBIக்கு நன்றாக தெரிந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) பேங்க கணக்கில் இருந்து வந்துகொண்டிருந்தது.
சொந்த பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலும், சொந்த கிரெடிட் கார்ட்டிலும், பணம் போட்டு, தீவிரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆயுதம் வாங்கும் ஆயுத முகவர்களை FBI அப்போதுதான் முதல் தடவையாக பார்த்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்வது, காஸ்ட்ரோவின் தேர்வு அப்படி!
(இந்த இடத்தில் கதையோடு கதையாக மற்றொரு விஷயம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரிட்டன் பொறுப்பாளராக இருந்த ஏ.சி.சாந்தன், லண்டனில் கைது செய்யப்பட்டார் அல்லவா? அவர் கைது செய்யப்பட்டது எப்படி என்றால்
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக சில தகவல் தொடர்பு சாதனங்களை, தமது சொந்த கிரெடிட் கார்ட் கொடுத்து வாங்கியதில்தான்!
FBIக்கு இவர்கள் யார் என்று புரிந்து விட்டதில், ஆகஸ்ட் 7-ம் தேதி அடுத்த சந்திப்பு நியூயார்க் குவீன்ஸ் பகுதியில் நடந்தது. அந்த சந்திப்புக்கு யோகா மட்டுமே வந்து, CI-1ஐ சந்தித்தார். ட்ரக்குகளில் பொருத்தக்கூடிய மிசைல் சிஸ்டம் (truck-mounted missile systems) தேவை என விடுதலைப் புலிகளிடம் இருந்து தகவல் வந்துள்ளது என்றார்.
இதையடுத்து, விலை பேசும் படலம் தொடங்கவே, எமது நிதிப் பொறுப்பாளரை அழைத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு சென்றார், யோகா.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 19-ம் தேதி அடுத்த சந்திப்பு. இம்முறை யோகா வரவில்லை. சதா, வேறு இருவருடன் வந்து சேர்ந்தார். “இவர்தான் எமது நிதி பொறுப்பாளர். விடுதலைப் புலிகளின் ஆயுத கொள்வனவுக்கு நிதி அப்ரூவல் கொடுப்பது இவர்தான்” என சதா அறிமுகப்படுத்திய நபர், சகில் என்கிற சகிலால் சபாரத்தினம்.
இவர்களுடன் கூட வந்திருந்த மூன்றாவது நபர், தணி என்கிற திருத்தணிகன் தணிகாசலம். இவர்கள் மூவரும் கனடாவில் இருந்து காரில், முதல் நாளே வந்திருந்தனர்.
நியூயார்க் குவீன்ஸில் இவர்கள், CI-1ஐ சந்தித்தனர். “ஆயுதங்களின் சாம்பிள் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் விலை பற்றி பேச முடியும்” என்றனர்.
“சரி, வாருங்கள்” என இவர்களை அழைத்துக்கொண்டு CI-1, லாங் லைன்ட் சென்றார். அங்கேயுள்ள ஒரு வீட்டில் வைத்து, “ஆயுத வியாபாரத்தில் எனது உதவியாளர்கள் இவர்கள்” என்று இரண்டு பேரை அறிமுகப் படுத்தினார். அவர்களும், FBI ஏஜென்டுகள்தான்.
கோர்ட் ஆவணங்களில் அவர்களது பெயர்கள் சங்கேதக் குறியீடுகளாக, UC-1, UC-2 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று FBI ஆட்களும், ஆயுதம் வாங்க வந்த இவர்கள் மூவரிடமும் சில மணி நேரங்கள் பேசினர். எவ்வளவு தகவல்கள் கறக்க முடியுமோ, அவ்வளவும் கறந்து பதிவு செய்து கொண்டனர்.
UC-1 உடன் பேசிய தணி, “கிபிர் விமானங்களை விழுத்தினால் மட்டும் போதாது. இலங்கை கடற்படையின் தாக்குதல் படகுகளையும் சிதறடிக்க ஏவுகணைகள் தேவை என்றார்.
“இதற்கு பணம் எங்கே வைத்து கொடுப்பீர்கள்?” என்று கேட்டார், UC-2.
எங்கே வேண்டுமானாலும் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். சுவிட்சலாந்து வங்கி கணக்கு இருந்தால் தாருங்கள். அதில் போட்டு விடுவோம். விடுதலைப் புலிகளுக்கு எல்லா நாடுகளிலும் பணம் உள்ளது” என்றார் தணி.
“சரி. ஆயுதங்களை எங்கே வைத்து கொடுப்பது?”
“இந்தியக் கடலுக்கு கொண்டு வாருங்கள். விடுதலைப் புலிகளின் கப்பலை வரச் சொல்கிறோம். இந்தக் கப்பலில் இருந்து ஆயுதங்களை அந்தக் கப்பலில் ஏற்றி விடலாம்” என்றார் தணி.
இந்தக் கட்டத்தில், மெயின் ஆயுத வியாபாரியாக நடித்துக் கொண்டிருந்த CI-1, தமது இரு சகாக்களில் ஒருவரான UC-2, நவீன ஆயுதங்கள் விஷயத்தில் ஒரு டெக்னிகல் எக்ஸ்பர்ட் எனவும், அவருக்கு லேட்டஸ்ட் ஆயுதங்கள் பற்றிய விளக்கம் அதிகம் எனவும் குறிப்பிட்டார். அதையடுத்து, தணி, சகில் ஆகிய இருவரின் கவனமும் UC-2 மீது படிந்தது.
“உங்களிடம் இருந்து இந்த ஆயுதங்களை நாங்கள் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் (UC-2) எம்முடன் இலங்கைக்கு வந்து, இந்த புதிய ஆயுதங்களை இயக்குவதற்கு விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு சம்மதமா?” என்று கேட்டார், சகில்.
“இதற்காக நீங்கள் மேலதிக கட்டணம் அறவிட்டாலும் அதை செலுத்த தயாராக இருக்கிறோம். பணம் ஒரு பிரச்னை அல்ல, ஆயுதங்களை இயக்க பயிற்சி கொடுப்பவர் இலங்கை வர வேண்டியது அவசியம்” என்றார், தணி.
“இலங்கைக்குதானே.. தாராளமாக வரலாமே. நானே வந்து பயிற்சி கொடுக்கிறேன்” என்றார் UC-2 சிரித்தபடி! அந்த FBI ஏஜென்ட் சிரிக்காமல் என்ன செய்வார்?
SA-18 ரக ஏவுகணை
இதையடுத்து, ‘ஆயுத வியாபாரிகள்’ இருவர் மற்றொரு அறையில் இருந்து ஒரு நீளமான மரப் பெட்டியை கொண்டுவந்தனர். அதை திறந்தபோது, அதற்குள் புத்தம் புதிய SA-18 ரக ஏவுகணை ஒன்று இருந்தது. ஏவுகணையுடன், அதன் ஃபயரிங் டியூப், ட்ரிக்கர் சிஸ்டம் ஆகியவற்றையும் எடுத்துக் காட்டினார், CI-1. (SA-18 ரக ஏவுகணை எப்படி இருக்கும் என்பதை, இந்தப் பக்கத்தில் உள்ள போட்டோவில் பார்க்கவும்)
இவற்றை தவிர, மரப் பெட்டிக்குள், இரு AK-47 துப்பாக்கிகள் புத்தம் புதிதாக இருந்தன.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க போனவர்கள், அவற்றை கைகளில் எடுத்துப் பார்த்தார்கள். மூன்று ஆயுத வியாபாரிகளுமாக சேர்ந்து, இவர்களுக்கு, “அதை எடுத்துப் பாருங்கள், இதை இப்படி திருப்பி பிடியுங்கள், ஏவுகணையின் கீழ்ப் பகுதியை தொட்டுப் பாருங்கள்” என சொல்லி, இவர்கள் அனைவரையும் அந்த ஆயுதங்களை தொட்டுப் பார்க்க வைத்தார்கள்.
அப்போதுதானே, இவர்களது கைவிரல் ரேகைகள் அவற்றில் பதிய முடியும்!
SA-18 ரக ஏவுகணை ஃபயரிங் டியூப்பை எடுத்து தனது தோளில் வைத்தபடி, “இனி தொலைந்தன, இலங்கை விமானப்படை கிபீர் விமானங்கள்” என்று சிரித்தார் தணி. ‘ஆயுத வியாபாரிகள்’ மூவரும் சேர்ந்து சிரித்தனர். …(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக