விடுதலைப் புலிகளின் கப்பல்களை வேட்டையாட புறப்பட்ட 4 கடற்படை கப்பல்கள்!
“அமெரிக்காவால் அதிகபட்சம் செய்யக்கூடியது விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தரித்து நிற்கும் இடங்களை காட்டுவதுதான். அவை நகர்ந்தால், தகவல் தருவோம். இதற்குமேல், நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. கூறியதும், பரபரப்படைந்தது இலங்கை கடற்படை. பல வருடங்களாக இவர்கள் ஓடி ஓடி தேடி வந்த புலிகளின் கப்பல்கள் அனைத்தும், எங்கெங்கே நிற்கின்றன என்று தெரிந்து விட்டது.
ஆனால், இலங்கை கடற்படை தாக்குதல் படகுகள் அவ்வளவு தொலைவு வரை செல்லும் திறனற்றவை. இவர்களுக்கு இருந்த பெரிய சிக்கலே, கடற்படை தாக்குதல் படகுகளில் இந்தோனேசியா அருகே உள்ள கடல் பகுதிக்கு செல்லும் அளவுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது. நடுக்கடலில் எரிபொருள் நிரப்பும் வசதி (mid-sea refueling) கிடைத்தால், தாராளமாக போகலாம்.
அப்போது இலங்கை கடற்படைக்கு தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட, தமது கடற்படை இஞ்சினியரிங் பிரிவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த டீமில் இருந்த ஒரு இஞ்சினியர் விநோதமான ஒரு திட்டத்தை சொன்னார்.
இலங்கை கடற்படையிடம் இருந்த P520 இலக்க கப்பலை, LSV கப்பலாக பயன்படுத்தலாம் என்பதே அவர் கொடுத்த ஐடியா. உங்களுக்கு கடற்படை விவகாரங்களுடன் பரிச்சயம் இருந்தால், LSV என்றால் என்ன என்று தெரிந்திருக்கலாம். Logistics Support Vessel என்பதன் சுருக்கமே அது. நடுக்கடல் ஆபரேஷனில், மற்றைய கப்பல்களுக்கு வழங்கல்களை அல்லது சப்ளைகளை செய்யும் கப்பல்.
LSV-ல் மற்றைய சப்ளைகளுடன், எரிபொருள் டேங்கும் இருக்கும். அதில் இருந்து மற்றைய கப்பல்களுக்கு நடுக்கடலில் வைத்து எரிபொருள் நிரப்பலாம்.
இதில் வினோதமாக என்ன இருக்கிறது? இவர் குறிப்பிட்ட P520 இலக்க கப்பல், பெரியதுதான் (1066 டன்) ஆனால், டப்பா கப்பல்! மிகப் பழையது. கட்டப்பட்டு, 44 ஆண்டுகள் ஆன கப்பல். இலங்கையின் காலி துறைமுகத்தில் உடைப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலுக்கும் ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே, முன்பு பிரதமராக இருந்த காலத்தில், பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தார். அப்போது, பிரான்ஸில் வசித்த இலங்கையர்கள், அவருக்கு அன்பளிப்பாக கொடுத்த கப்பல் அது. கப்பல் இலங்கை வந்து சேர்ந்ததும், அதை கடற்படைக்கு கொடுத்தார் ராஜபக்ஷே.
கப்பலின் அதிகபட்ச வேகமே, மணிக்கு 8 நாட்தான். இதனால், கடற்படை யுத்தம் எதற்கும் பயன்படுத்த முடியாது. இவ்வளவு மெதுவாக செல்லும் கப்பலை கடலில் ஓடவிட்டால், விடுதலைப் புலிகள் சுலபமாக தாக்கி விடுவார்கள் என்பதால், பல ஆண்டுகளாக சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் அது.
கடற்படை இஞ்சினியர்கள் குழு ஒன்று அந்த கப்பலை செக் பண்ணி, கப்பல் வேகம் இல்லைதான், ஆனால், சிங்கிள் இஞ்சின் உடைய கப்பல் நடுக்கடலில் பழுதடைந்து நின்று விடாது என்றனர்.
இதையடுத்து, இலங்கை கடற்படையின் P520 இலக்க கப்பலை, LSV கப்பலாக மாற்றினார்கள். அதில் எரிபொருள் டேங்க், தண்ணீர் டேங்க், உணவு வைப்பதற்கு குளிர் அறை எல்லாம் பொருத்தப்பட்டன.
இலங்கையில் உள்ள கடற்படை ஷிப் யார்டிலேயே இந்த வேலைகள் நடைபெற்றன. இலங்கை முழுவதிலும் கண்களும், காதுகளும் வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்ட புலிகளின் உளவுப் பிரிவு இதை எப்படி மிஸ் பண்ணினார்கள் என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும்.
கீழேயுள்ள போட்டோவில், விடுதலைப் புலிகளின் கப்பல்களை வேட்டையாட சென்ற இலங்கை கடற்படை கப்பல்களில் ஒன்றான சயூரா (P-714)
LSV கப்பலாக மாற்றப்பட்ட P520 இலக்க கப்பல் முழு சப்ளையுடன் தனியாக புறப்பட்டு சென்றது.
விடுதலைப் புலிகளின் கப்பல்களை வேட்டையான அனுப்புவது என திட்டமிடப்பட்ட கப்பல்களில் இந்த P520 இலக்க கப்பல் மட்டும்தான் பாடாவதி கப்பல் என்றில்லை. தாக்குதலுக்கு செல்லவிருந்த மற்றைய கப்பல்களும் பழையவைதான்.
ஒரு கப்பல், அமெரிக்க கடற்படையிடம் இருந்து செகென்ட் ஹான்டாக வாங்கப்பட்டது. அது கட்டப்பட்டு, 36 ஆண்டுகள் ஆகியிருந்தன. தாக்குதலுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த கப்பல்களில் மிகப்பெரிய கப்பல், இந்தியாவால் வழங்கப்பட்டது. அதுகூட, 19 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில், உலக யுத்தத்து கால பீரங்கி ஒன்றை பொருத்திய நிலையிலேயே, இந்தியா கொடுத்திருந்தது. அந்த பீரங்கி அகற்றப்பட்டு, புதிய ஆயுதங்கள் பொருத்தப்பட்டன.
மற்றொரு கப்பல், ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட கப்பல். போர்ட் உத்தரவின்பேரில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடற்படை, கோர்ட்டுக்கு பணம் கட்டி அந்த கப்பலை மீட்டது. அதுவும் ஒரு LSV கப்பலாக மாற்றப்பட்டது. அந்தக் கப்பலில் மருத்து டீம் ஒன்று பயணம் செய்தது.
விடுதலைப் புலிகளின் கப்பல்களை நடுக்கடலில் தாக்கும்போது, கடற்படை வீரர்கள் காயமுற்றால், இந்த மருத்துவ டீம், முதலுதவி செய்யும். ஆனால், தாக்குதலில் கடற்படை வீரர்கள் யாராவது இறந்தால், உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல எந்தவொரு கப்பலிலும், ஃபிரீஸர் வசதி கிடையாது. உயிரிழந்தால், உடலை கடலில் வீசிவிட்டு வரவேண்டியதுதான்!
கீழேயுள்ள போட்டோவில், விடுதலைப் புலிகளின் கப்பல்களை வேட்டையாட சென்ற இலங்கை கடற்படை கப்பல்களில் ஒன்றான ஷக்தி (L-880)
பிரதான தாக்குதல் கப்பலாக செயல்பட்ட கப்பலின் பெயர், சயூரா. அதன் கேப்டனாக இந்த ஆபரேஷனுக்கு சென்றவர், கேப்டன் பியால் சில்வா. மொத்தம் 4 தாக்குதல் கப்பல்கள் புறப்பட்டன. அவற்றின் பெயர்கள், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சயூரா (P-714), சமுதுரா (P-621), ஷக்தி (L-880), சுரனிமாலா (P-702).
நான்கு கப்பல்களில் சென்று விடுதலைப் புலிகளின் கப்பல்களை நடுக்கடலில் வேட்டையாடும் இந்த ஆபரேஷனுக்கு பிரதான தலைவராக சென்றவர் ஒரு தமிழர். பெயர், டி.எல்.சின்னையா. இவர், சயூரா கப்பலில் இருந்தார்.
இந்த நான்கு கப்பல்களும் ஒரேயடியாக புறப்பட்டு, இலங்கை கடல் எல்லைக்கு வெளியே எங்கோ செல்கின்றன என்பதையும் புலிகளின் உளவுப் பிரிவு எப்படி மிஸ் பண்ணினார்கள் என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும்.
புலிகளுக்கு தகவல் கசிந்துவிட கூடாது என்பதற்காக, கப்பலில் இருந்த கடற்படை வீரர்களுக்கும், எதற்காக இந்த கப்பல்கள் புறப்பட்டு செல்கின்றன என்ற உண்மை கூறப்பட்டிருக்கவில்லை.
“சீனாவில் இருந்து இலங்கை அரசுக்கு ஆயுத கப்பல் ஒன்று வருகிறது. பாதி வழி சென்று அந்த கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்க போகிறோம்” என்றுதான் கடற்படை வீரர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. கப்பல்கள் புறப்பட்டு இலங்கை கரையில் இருந்து 200 கடல் மைல்களுக்கு அப்பால் சென்ற பின்னரே, “புலிகளின் கப்பல்களை தாக்க போகிறோம்” என்று படற்படை வீரர்களுக்கு தெரிவித்தார், டி.எல்.சின்னையா.
கீழேயுள்ள போட்டோவில், விடுதலைப் புலிகளின் கப்பல்களை வேட்டையாட சென்ற இலங்கை கடற்படை கப்பல்களில் ஒன்றான சமுதுரா (P-621)
இடையே எரிபொருள் நிரப்பிக்கொண்டு இந்த 4 தாக்குதல் கப்பல்களும், 6 நாட்கள் பயணம் செய்து, இந்தோனேசிய கடல் பகுதிக்கு அருகே சென்றன. அதன்பின் அமெரிக்க உளவுத்துறை கொடுத்த சாட்டலைட் இமேஜில் இருந்த புலிகளின் கப்பல்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடங்கின. ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த சாட்டலைட் இமேஜில் இருந்து 4 கடல் மைல்கள் கிழக்கே புலிகளின் கப்பல் ஒன்று நகர்ந்து நிற்கிறது என அமெரிக்கா அப்டேட் செய்தது.
2007-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் தேதி, விடுதலைப் புலிகளின் முதலாவது கப்பல் இவர்கள் பார்வையில் பட்டது. அது ஒரு டேங்கர் ரக கப்பல்.
அந்த கப்பலில் இருந்தவர்களுடன் சயூரா கப்பலில் இருந்து ரேடியோ தொடர்பை ஏற்படுத்தி, கப்பலின் அடையாள விபரங்களை கூறுமாறு கேட்டார்கள், இலங்கை கடற்படையினர்.
விடுதலைப் புலிகளின் கப்பலில் இருந்தவர்கள், தம்மிடம் தகவல் கேட்பவர்கள், ஆஸ்திரேலிய கடற்படை என்றே நினைத்தார்கள். இலங்கை கடற்படையினர் அவ்வளவு தொலைவுக்கு வருவார்கள் என புலிகளின் கப்பலில் இருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை.
புலிகளின் கப்பலில் இருந்து ஒருவர் தமிழ் உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் ரேடியோவில் பதில் கூறினார். “நாங்கள், அல்ஜீரியாவை சேர்ந்த எண்ணைக் கப்பல்” என்றார்.
“நீங்கள் அல்ஜீரியா கப்பல் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும், நீங்கள் யார் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்” என்ற பதில், சயூரா கப்பலில் இருந்து போனது. …(தொடரும்)
-விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி

அத்தியாயம் 21

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக