மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் வடக்கு பரதர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது51). இவர் சொந்தமாக 3 சக்கர சைக்கிள் வைத்து மூட்டை ஏற்றும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (40). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு பியூலா (15), ஷீலா (12) ஆகிய 2 மகள்களும், ஆபிரகாம் (7) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் பியூலா 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஷீலா 6-ம் வகுப்பும், ஆபிரகாம் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் ராமலட்சுமியின் நடத்தையில் பாஸ்கரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி அவர் ராமலட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் நீ ஒழுங்காக இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாஸ்கரன் மிரட்டுவது வழக்கம். நேற்று இரவும் இது போன்று கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரம் மனைவியிடம் வாக்குவாதம் செய்த பாஸ்கரன் பின்னர் தூங்க சென்று விட்டார். பாஸ்கரனின் குழந்தைகள் வேறு ஒரு அறையில் படுத்து தூங்கினர். இந்த நிலையில் இன்று அதிகாலை பாஸ்கரன் திடீர் என்று அம்மி கல்லை எடுத்து ராமலட்சுமியின் தலையில் போட்டார். ரத்த வெள்ளத்தில் ராமலட்சுமி உயிருக்கு போராடினார்.
ஆத்திரம் அடங்காத பாஸ்கரன் ராமலட்சுமியின் கழுத்தை நெறித்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். மனைவியை கொலை செய்த பாஸ்கரன் தனது குழந்தைகளை கவனிக்க ஆளில்லை என நினைத்தார். இதையடுத்து அடுத்த அறையில் தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகளையும் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார்.
குழந்தைகள் பயங்கரமாக அலறின. சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இதனிடையே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்து பார்த்த போது ராமலட்சுமி உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி குரும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வருவதற்குள் பாஸ்கரன் குரும்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். சம்பவ இடத்துக்கு குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ராமலட்சுமி உள்ளிட்ட 4 பேரின் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாஸ்கரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் குரும்பூர் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக