செவ்வாய், 26 மார்ச், 2013

ஐயோ! ஐயோ! எண்டு சனம் அலறித்துடிச்சாலும்

ஐயோ! ஐயோ! எண்டு சனம் அலறித்துடிச்சாலும் நாங்கள் எங்கள் திருட்டுப் பிழைப்பை நிறுத்த மாட்டமியா!

ஐபோன், ஐபோன், எண்டு T.C.C பணம் தின்னும் பிசாசுகள் தமது பிள்ளைகளுக்கு புதுவீடும், புதுக் காரும் வாங்கிறதுக்கான திட்டம்தான் இது. இவங்கடை பிள்ளைகளுக்கு எப்பனும் வெக்கம் மானம் இல்லையோ!

அவையள் அடிக்கடி மக்களிடம் கதையளக்கிற 5ம் கட்ட ஈழப்போர் தொடங்குறதுக்கு அண்ணைக்கு இன்னும் காயம் சரியா மாறவில்லையாம் எண்டு சொல்லி இப்பவும்TCC கேணல்கள் இரகசியமாக காசு சேர்க்கினம்.

அதுவும் காசு வேண்டுபவர்களிடம் இது முகவும் ரகசியமான திட்டம் இதை யாருக்கும் வெளியில் சொல்லிப் போடாதையுங்கோ எண்டு தலைவரைக் கொண்டு சத்தியம் வேற வேண்டினவையளாம், அதுக்கு காசு கொடுத்தவர்களும் சாட்சியாக உள்ளனர்.

இப்ப போட்டம்மனுக்கும் இன்னும் காயம் மாறவில்லை எண்டும் இருவரின் பராமரிப்பு செலவுக்கு எண்டு சொல்லி இன்னொரு பக்கத்தால இரகசியமாக காசு சேர்க்கினம்.





இந்த ஐ போன் கவர்கள் தாயக உணர்வு மிகுந்ததாம் எண்டு கதை அளக்கினம் பாருங்கோ, இது சுயநலத்துடன் திருட்டுத் தனம் நிறைந்து கிடப்பதை அனைவரும் அவதானிக்கலாம். சிலநேரம் அவர்களின் பாணியில் தாயக உணர்வு மிகுந்த இந்த ஐ போன் கவர் வருமானமும் பொட்டம்மானின்ர காயத்துக்கு எண்டும் கதை விடுவினம் பாருங்கோ!.

யு டியூப்பில புலிகளின் களமுனைச் சண்டையை பார்த்துவிட்டு அடிபாட்டுக் கதையளக்கினம், இது வடிவேலுவின் P.K L.M.G ரேஞ்சில இப்ப வந்து நிக்கிது. ஏனென்டால் தாங்கள் UK L.M.G வச்சு தான் அடிபட்டதெண்டு TCC கேணல் ஒருவர் புலுடா விட்டிருக்கிறார். அதுவும் தான் uk இல இருந்து அங்க கொண்டுபோய் அடிபட்டவராம்.

ம்ம்ம். இவர்களுக்கு சண்டையெண்டால், இயக்கமெண்டால், காயமெண்டால், மாவீரரெண்டால், போராளியெண்டால் எல்லாவற்றுக்கும் மேலாக இயக்கத்தினர கொள்கை, கட்டுப்பாடு, திட்டமிடல்களையும், விடுதலைப் புலிகளுக்கான மரபு வழியிலான சில பண்புகள் கூட என்னவென்று தெரியாதவனெல்லாம் T.C.C இல் கேணலா இருந்தால் ஐநாவில மட்டுமில்ல, ஐயனார், அன்னைமரியாள், கோயிலெல்லாம் கொடி ஏறினால் கடை போடுறதும், பணத்தை பங்குபோடுறதும் தானே நடக்கும்.

கேட்டால் நாட்டுக்காக குளிரிலும் பணியிலும் பணி செய்யினமாம். நாட்டுக் காசில நல்லா குளிர் காயினம் எண்டு மட்டும் விளங்குது. இந்தப் பிளைப்பெல்லாம் ஒரு பிளைப்ப்ப்பா? தூஉ

திருட்டு என்றால் இப்பிடி இருக்கோணும்! இதுதான் tcc யின் போலித் தலைமையின் துணிகர அதிரடி பகல் கொள்ளை! திருடன் உங்கள் முன்னாள் நின்றும் உங்களால் பிடிக்க முடியாது! முடிந்தால் பிடித்துப் பாருங்கள்!

காசு நட்டம் போய் விடும் எண்டு பிரித்தானியாவில் இருந்து ஜெனிவா நோக்கி tcc இம்முறை ஒரே ஒரு பேருந்தைத் தான் ஒழுங்கு செய்துள்ளது.

இவர்களால் 50 பேருக்கு மிஞ்சி மக்களை திரட்ட முடியாது போலும்!
மக்களிடம் போவதற்கு இவர்களுக்கு துணிவு இருக்குதா? எதைச் செய்தாலும் மிகவும் இரகசியமாகவே செய்கிறார்கள் ஜெனிவாவிர்க்கான பயணத்தையும் கூட! திருட்டு நாதாரிகள்!

"இயக்கச் சொத்துக்களில் நாம் படிக்க மாட்டோம்! சாப்பிட மாட்டோம்! மக்களுக்கான பணத்தை மக்களுக்கு கொடுங்கள்! அல்லது பாதுகாப்பாக வைத்து விட்டு உங்கள் உழைப்பில் எங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள் என்று எப்படி சொல்ல முடியும் ஈசியாய் இருந்து! ஓசியாய் வாழப் பழகி விட்டது! வெக்கம் என்ன? மானம் என்ன? ரோசம் என்ன? எங்களுக்கும் இல்லை! எங்களைப் பெத்தவர்களுக்கும் இல்லை இதை நாக்கல் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்! அதனால் நாக்கல் யாரிடமும் சொல்வதும் இல்லை வெளியில் கண்டபடி திரிவதும் இல்லை! உங்களாலும் எங்களை சந்திக்க முடியாது"!

இது tcc கேணல் ஒருவரின் பிள்ளையின் மனச்சாட்சியின் வரிகள்! என்ன அருமையான வரிகள் அனைத்தும் உண்மை!


உன்தமிழ்
Share |

   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல