ஞாயிறு, 19 மே, 2013

எத்தனை எத்தனை சிலைகளடா? -ஸ்பெஷல் அலசல்

தமிழ் தாய் சிலை வைக்க ஒரு செய்தி வந்தவுடன் என்ன ஒரு பரபரப்பு. என்னமோ தமிழகத்தில் சிலைகளே இல்லாதது போல.

உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகமா அரசியல் தலைவர்கள் ஜாதி கட்சி தலைகள், சினிமாகாரர்கள் என்று சகட்டு மேனிக்கு சிலைகள் இருக்கும். தி மு க ஆட்சிக்கு முன்பு 1960 களில் எல்லாம் ஒன்று இரண்டு குதிரையில் போகிற வெள்ளைக்காரன், ஜார்ஜ் மன்னர், காந்தி என்று ஆங்காங்கே இருக்கும்.

நேரு தனக்கு சிலையே கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக கூறி விட்டதால் போனால் போகிறது என்று காங்கிரஸ்காரர்களும் சிலைகளை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் சென்னையில் நேரு சிலை புரட்சி தலைவர் தானே திறந்து வைத்தார் காங்கிரஸ் காரர்கள் அல்லவே?.

அண்ணா முதல்வரான பிறகு பீச் ரோட்டில் காரில் போகும் பொது மெரினா பீச் வெறிச்சென்று இருண்டு இருக்கே கொஞ்சம் சிலைகளை வைத்து பார்க்கலாம் என்று உலக தமிழ் மாநாடு பொது ஒரு 20 சிலைகளை நட்டார்.

அண்ணா போன பிறகு தமிழ் நாட்டில் மக்கள் தொகையை விட அண்ணா சிலைகளை திறக்க கருணாநிதி பிளான் போட்டார். கூடவே பெரியார் மறைந்த பிறகு அவருக்கும் சிலைகள் போட்டி போட்டு கிளம்பின. சென்னையில் எங்கு பார்த்தாலும் சிலைகள், நின்றபடியே மிரட்டும் அண்ணா, உட்கார்ந்து புத்தகம் படிக்கும் அண்ணா, மார்பு வரை அண்ணா என்று பல போஸ்களில் காட்சி அளிக்கிறார் .

பிறகு அம்பேத்கர் முத்துராமலிங்க தேவர், திருவள்ளுவர் சிலைகள். இதில் போட்டி அய்யனுக்கும் அண்ணாவிற்கும் தான் – யாருக்கு அதிக சிலைகள் என்று. காமராஜர் பாவம் எங்கயாவது ஒன்று இரண்டு இருக்கும். சிலை கல்ச்சர் கொண்டு வந்தவர் கலைஞர் தான்.

கலைஞர் ஆட்சின் பெரும் பகுதி சிலைகள் திறபதில் கழிந்தது. புரட்சி தலைவர் ஆட்சியிலும் அண்ணாவிற்கு சிலை திறப்பதில் போயிற்று. அவர் மறைந்த பிறகு அவருக்கு சிலைகள் வைக்க தொடங்கினார்கள். எம் ஜி ஆர் சிலைகள் தமிழ் நாட்டில் அதிகமா வர தொடங்கியதும் இந்த கால கட்டத்தில் தான். ஊருக்கு ஊரு கூலிங் கிளாஸ் தொப்பி சிலைகள் கண்டிப்பா இருக்கும்.

பிறகு சாதி மத மோதல்களுக்கு பிறகு பல தலைவர்களின் சிலைகள் இரும்பு கம்பிக்குள் சிறை வைக்கப்பட்டன பல தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. கை போன சிலைகள்,தலை போன சிலைகள் etc etc அந்த சிலைகளுக்கு போலீஸ் காவல் வேற. 24 மணி ஷிப்ட் டுட்டி. உலகத்தில் சிலைகள் பாதுகாக்க போலீஸ் காவல் போட்ட ஒரே இடம் தமிழகம்.

ஊருக்கு ஊரு சாயம் போன சிலைகள், கலர் போன சிலைகள், பின்னமான சிலைகள், காகம் உச்சா போகும் பாத்ரூம் ஆக மாறிய சிலைகள், டிராபிக் ஸ்தம்பிக்க வைக்கும் சிலைகள், போஸ்டர் ஓட்ட சுவராக மாறிய சிலைகள் – எத்தனை எத்தனை சிலைகள்?

இதில் கண்ணகி உள்ளே புகுந்து ரவுண்டு கட்டி அடித்து தூக்கி வைக்கப்பட்டு பிறகு கட்சி தலைவியாக மாறி பார்ட்டி ஆபீஸ் போய் நின்று கொண்டு சென்னையை எரித்தாள். அடுத்து ஆட்சியில் மீண்டும் பீச் காற்று வாங்க வந்து விட்டார். சேம் பிளேஸ்.

அமெரிக்கா சென்று வந்த கலைஞர் சுதந்திர தேவி சிலை மாதிரி கன்னியாகுமரி அருகே அய்யன் சிலை வைத்தார் அது சேது சமுத்ர திட்டத்தை பலி வாங்கியது. இப்போது அது கேட்பார் அற்று இருகிறது. காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் உள்ளே விவேகனந்தர் சிலை இருப்பதால் மக்களுக்கு இடைஞ்சல் இல்லை. ஹை கோர்ட் உள்ளேயும் சிலைகள் இருக்கு அதெல்லாம் ஓகே தான்.

அடுத்த செட் – கலைஞர், ராமதாஸ் , விஜயகாந்த் சிலைகள் வர தொடங்குவதற்கு முன்பு யாராவது கோர்ட்ல் பொது நல வழக்கு போட்டு ஸ்டே வாங்கலாம் எப்படி மெரினா பீச் இனிமேல் ஓபன் ஏர் சமாதியாக மாற கோர்ட் ஸ்டே கொடுத்த மாதிரி தடை வாங்கலாம்.என்ன விலை கொடுத்தாவது சிலைகளை ஸ்டாப் செய்யுங்கள். இல்லாவிட்டால் தெருவில் போகும் போது சிலை தடுக்கி கிழே விழுந்து விடுவோம்.


பிரகாஷ் எம்.ஸ்வாமி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல