ஞாயிறு, 19 மே, 2013

ஹாட் ப்ளேட்டில் உட்கார வைத்து -ஆசிட் ஊசி போட்டு விசாரணையில் கைதி மரணம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஈடாஹ் மாவட்டத்தில் உள்ளது அவகார்.அங்கே ஒரு கொலை தொடர்பான விசாரணைக்கு கடந்த வியாழனன்று அவகார் காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் பல்வீர் என்ற நபரை அழைத்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அடித்து உதைத்து விசாரணை நடத்தியதில் பல்வீரிடமிருந்து உண்மை வெளிவரவில்லை .அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்ற யோசனையில் அவரை கொதிக்கும் ஹாட்ப்ளேட்டின் மீது அமர வைத்து விசாரித்துள்ளனர். பின்புறம் வெந்துபோன நிலையில் எரிச்சலில் கதறி துடித்த நிலையில் கூட விடாத அந்த காவல்துறையினர்

அடுத்த கட்டமாக ஆசிட் மற்றும் கெரோசின் ஆகியவற்றை ஊசி மூலம் அவர் உடம்பில் ஏற்றியுள்ளனர்.ஆசிட் மற்றும் கெரோசின் உடலில் ஏறிய பின் பல்வீரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

மருத்துவமனையில் உடல் எரிச்சல் மற்றும் வெந்துபோன காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பல்வீர் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளியன்று இறந்து போனார்.

விபரம் வெளியில் பரவிய பிறகு ஈடாஹ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் மோகன் ஷர்மா அவகார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஷைலேந்திர சிங்கையும் விசாரணையில் அவருடன் இருந்த மற்ற இருவரையும் இடைபணி நீக்கம் செய்துள்ளார்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீதிபதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வீரின் குடும்பத்தினர் போலீசார் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி விடாது துன்புறித்தியத்தின் காரணமாகவே பல்வீர் இறந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல