வியாழன், 23 மே, 2013

லண்டனில் முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதல் (படங்கள் இணைப்பு)

லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அரசின் நெருக்கடி குழுவின் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.  பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மிகக் கொடூரமான முறையில் நேற்று மாலை கொல்லப்பட்டார். ஆடு மாடுகளை வெட்டுவது போல அல்லாகு அக்பர் என்று கூறிக்கொண்டு கொலையாளிகள் கண்டதுண்டமாக வெட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து டேவிட் கேமரன் அவர்கள் தனது பிரெஞ்சு பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.  இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஒரு தீவிரவாதத் தாக்குதலாக கருதி அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இஸ்லாமிய கோஷங்களை எழுப்பிய இருவரால் பட்டப் பகலில் இந்த இராணுவ வீரர் இறைச்சி வெட்டும் கத்திகள் மற்றும் கூரிய இரும்பு வெட்டறுவாள் ஆகியவற்றால் தாக்கப்பட்டார்.  தாக்குதலை நடத்திய பிறகு, அந்த இருவரும் தப்பியோட முயற்சிக்கவில்லை. காவல்துறையினர் வந்த போது அவர்களை நோக்கியும் இந்த இருவரும் ஓடியுள்ளனர்.
 
பின்னர் அந்த இருவரும் சுடப்பட்டு கைது செய்யப்பட்டனர். உலகில் முஸ்லீம் பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதை இது தெட்டத்தெளிவாக காட்டுவதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.





















 
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல