தன்னுடைய பிள்ளைகளுக்கு பிரபாகரன் வைத்த பெயரை மாற்ற வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி தெரிவித்துள்ளார்.
வன்னி இறுதி யுத்தத்தின் பின் வவுனியா அகதி முகாமில் இருந்த வேளை அங்கு வந்த கருணா தமிழ்செல்வனின் மனைவியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு கருணா மற்றும் புலனாய்வு பிரிவினரின் ஏற்பாட்டில் கொழும்பில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
அவர் இன்று தன்னுடைய மகளுடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சென்று தங்கள் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டார். பிரபாகரனால் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை மாற்ற வேண்டியிருப்பதாக திருமதி தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தாங்கள் நான்கு வருடங்களாக இருண்ட யுகத்திற்குள் இருப்பதாகவும், தனது பிள்ளைகள் நான்கு வருடங்களாகப் பாடசாலையைக் காணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக