திங்கள், 17 ஜூன், 2013

இந்திய பெண்ணை கற்பழித்து விட்டு உடலை வெட்டி பெட்டிக்குள் மறைத்து வைத்த 21 வயது இளைஞன் !!

டாக்டராக வர சிலர் படிப்பார்கள். மேலும் சிலர் எஞ்சினியராகவேண்டும் என்று படிப்பார்கள். ஆனால் நீங்கள் இங்கே பார்க்கும் டானியல் என்னும் 21 வயது இளைஞன் எப்படி கொலைசெய்வது என்று பல புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறார்.

ஒரு கொலையோடு நின்று விடாது சீரியல் கில்லர்(வரிசையாக கொலைசெய்பவர்) ஆக எப்படி மாறுவது என்று, இந்திய பெண் ஒருவரைக் கொலைசெய்த பின்னர் புத்தகங்களை வாங்கிப் படித்துள்ளார் என்றால் பாருங்களேன் ! சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் :

அவுஸ்திரேலியாவில் வசித்துவந்த டானியல் ஸ்டையின் ரெஜினோல் என்னும் இளைஞர், சில புத்தங்களைப் படித்துவிட்டு தனது தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்த இந்தியப் பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலைசெய்துள்ளார். டோஷா தாகீர் என்னும் 24 வயது இந்திய மாணவி அவுஸ்திரேலியாவுக்கு மாணவர் வீசாவில் சென்றுள்ளார். அவர் இக் கொலைகாரன் குடியிருந்த தொடர்மாடியில் தான் வசித்து வந்துள்ளார். டானியல் ஒரு நாள் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அவரைக் கற்பழித்து கொலைசெய்துள்ளார். பின்னர் டோஷாவின் உடலை சிறிய பாகங்களாக வெட்டி அதனை ஒரு சூட்கேசில் போட்டு, படு சகஜமாக இழுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அவர் வரும்வேளை எடுக்கபட்ட வீடியோ(CCTV) புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த சூட்கேசை ஒரு கால்வாயில் போட்டுவிட்டு, மேலதிகமாக எப்படி கொலைகள் செய்வது என்பது குறித்து சில புத்தங்களை வாங்கிக்கொண்டு வீடு சென்றுள்ளார். தொடர்ந்து கொலைகளைச் செய்யவேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்திருக்கிறது. ஆனால் அவுஸ்திரேலியப் பொலிசார் சும்மா விடுவார்களா ? ஒருவாறு மோப்பம் பிடித்து குற்றவாளியை மடக்கிப் பிடித்துவிட்டார்கள்.

சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு , நேற்றையதினம் முடிவுக்கு வந்தது. நீதிபதி டானியலுக்கு 45 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இப்படியும் மனிதர்களா என்று ஏங்கவைக்கும் வகையில் சில மனிதர்கள் உள்ளார்கள் ! இதில் குறிப்பிடத்தக்க விடையம் என்னவென்றால், டானியல் ஒரு மன நோயாளி அல்ல என்பது தான் !
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல