திங்கள், 17 ஜூன், 2013

வங்கி ஊழியர் தட்டச்சில் தூங்கியதில் 37,269 மில்லியன் ரூபா பணம் இடம் மாறியது!!!!

ஜேர்மனியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் உடல் அசதியினால் கணனியின் தட்டச்சில் (கீபோர்ட்) கைவைத்தவாறு தூங்கியதில் தவறுவதலாக சிறிய தொகைப் பணத்திற்குப் பதில் 37,269 மில்லியன் ரூபா பரிமாறப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர் தொகை 62.40 யூரோக்கள் மாத்திரமே பரிமாற வேண்டி இருந்துள்ளது. ஆனால் அசதியினால் ஏற்பட்ட தூக்கத்தில் அவரது கை தட்டச்சின் 2 என்ற இலக்கம் அழுத்தப்பட 222,222,222.22 யூரோ என பதிவாகிவிட்டது. இலங்கை மதிப்பில் 37,269 மில்லியன் ரூபா ஆகும்.

இருப்பினும் குறித்த ஊழியர் விட்ட தவறை உடனடியாக கண்டுபிடித்து திருத்தம் செய்துள்ளது வங்கி. மேலும் தவறிழைத்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது வங்கி.

இதனை எதிர்த்து ஊழியர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அசதியினால் ஏற்பட்ட தவறுக்காக தண்டிக்காது மீண்டும் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல