வியாழன், 18 ஜூலை, 2013

முகத்தில் தாடி வளர்ந்துள்ளதை 19 வருட காலமாக மறைத்த பெண்

முகத்தில் தாடி வளரும் விநோத பாதிப்புக்குள்ளான பெண்ணொருவர், 19 வருடங்களுக்குப் பின் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தோனேசியாவில் பெனகா கிராமத்துக்கு அருகிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த அகஸ்ரினா டோர்மன் (38 வயது) என்ற மேற்படி பெண்ணுக்கு, அவரது முதலாவது குழந்தை பிறந்தது முதற்கொண்டு தாடி வளர ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மற்றவர்களின் கவனம் தன்பால் அநாவசியமாக திசை திரும்புவதையும் தன்னால் தனது பிள்ளைகள் ஏனையவரின் கேலிக்குள்ளாவதையும் தவிர்ப்பதற்காக இத்தனை வருட காலமாக முக்காட்டால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர் மறைத்து வந்தார்.

இந்நிலையில் அகஸ்ரினாவுக்கு ஏற்பட்ட பாதிப்பை அறிந்துகொண்ட சிலர், அதைப் பயன்படுத்தி அவரது மூத்த பிள்ளையை (தற்போது 19 வயது) இகழவும், இனிமேலும் தனது பாதிப்பை மறைத்துப் பயனில்லை என உணர்ந்த அவர் இந்த வாரம் முதன்முதலாக தனது தாடியை மறைத்திருந்த முக்காட்டை அகற்றியுள்ளார்.

மக்கள் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை காலப்போக்கில் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புவதாக அவர் கூறினார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல