வியாழன், 18 ஜூலை, 2013

365 நாட்களில் 366 மரதன் ஓட்டங்களை ஓடி உலக சாதனை

3 வருடங்களுக்கு முன்னர் நரம்பு சம்பந்தமான நோயொன்றால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர், அந்நோயிலிருந்து விடுபடுவதற்காக 365 நாட்களில் 366 மரதன் ஓட்டங்களை ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

டென்மார்க்கிலுள்ள நேஸ்ட்வெட் நகரைச் சேர்ந்த அன்னெட்ரி பிரெட்ஸ்கோவ் (41 வயது) என்ற மேற்படி பெண் தினசரி 26.2 மைல் தூரம் ஓடியுள்ளார்.

அவர் கடந்த 14 ஆம் திகதி 52.4 மைல் தூர இரட்டை மரதன் ஓட்டங்­களை 10 நிமிடங்கள் 44 செக்கன்களில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலை 15 ஆம் திகதி மரதன் ஓட்டத்தை ஆரம்பித்த அவர், இதுவரை 9589.2 மைல் தூரத்துக்கு ஓடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது மரதன் ஓட்ட முயற்­சியால் தனக்கு ஏற்பட்ட தண்டுவட விறைப்பு நோய் முழுமையாக அகன்று விட்டதாக அவர் கூறினார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல