சனி, 13 ஜூலை, 2013

கொழும்பில் எரிந்த பெண்போராளி!

கொழும்பில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண்போராளி கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

23வயதான கந்தசாமி புவனேஸ்வரி என்ற பெண் போராளி கடந்த 20 நாட்களுக்கு முன்னா் கல்கிசையில் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ காரணமாக கயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கல்கிசை பொலிஸார் கூறியிருந்தனா்.

ஆனால் தீ எவ்வாறு ஏற்பட்டது? இது கொலையா தற்கொலையா என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறவினா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கட்டுநாயக்கா சுதந்திர வா்த்தக வலையத்தில் முன்னாள் பெண் போராளிகள் பலா் அரசாங்கத்தினால் வேலைக்கு அமைா்த்தப்பட்டிருந்தனா். அவ்வாறு வேலைக்கு அமாத்தப்பட்ட போராளிகளில் ஒருவரே நேற்று மரணமடைந்த பெண் போராளியாவார்.

சிங்கள இளைஞர் ஒருவா் காதலித்து விட்டு பதிவு திருமணம் செய்வதாக கூறியே கொழும்புக்கு அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸார் விசாரணை நடத்துகின்றனா்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல