சனி, 13 ஜூலை, 2013

இப்படியும் கூட புற்றுநோய் வருமா?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். பெரும்பாலானோருக்கு அத்தகைய புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்று தெரியும். அதில் புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற டயட் மற்றும் அதிகப்படியான கதிர்வீச்சுக்கள் சருமத்தில் பாய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. புற்றுநோயானது ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.

ஆகவே புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவற்றைப் பற்றி தெரிந்தால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக மேற்கொள்ள முடியாது.

இருப்பினும், அவற்றை தெரிந்து கொண்டால், புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்பதற்காக தமிழ் போல்டு ஸ்கை, புற்றுநோயை ஏற்படுத்தும் சில விசித்திரமான காரணங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

காற்று சுத்தப்படுத்திகள்

ஆய்வு ஒன்றில், காற்று சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்துவதாலும், புற்றுநோய் வளர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது. ஏனெனில் அதில் ப்தளேட்ஸ் (phthalates) என்னும் புற்றுநோய் செல்களை வளர்க்கும் பொருள் இருக்கிறது. ஆகவே அறைகளில் நறுமணத்துடன் வைத்துக் கொள்ள, அத்தகைய காற்று சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை அறைகளில் வைக்கலாம்.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.

நைட் ஷிப்ட்

வீட்டில் இருக்கும் பெண்களை விட, நைட் ஷிப்ட் செல்லும் பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் நைட் ஷிப்ட் செல்வதை தவிர்ப்பது நல்லது.

மௌத் வாஷ்

ஆய்வு ஒன்றில், மௌத் வாஷில் எத்தனால் அதிகம் இருப்பதால், அதனைப் பயன்படுத்தினால், அது வாய் புற்றநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்கிறது. ஏனெனில் எத்தனாலானது வாயில் உள்ள திசுக்களை உடைத்து, புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்களை வாயில் எளிதில் ஊடுருவ வைக்கும்.

பிரா

பிரா அணிவதாலும் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக, ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். அதிலும் நாள் முழுவதும் பிரா அணிபவர்களுக்கு தான், மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார். ஆகவே தினமும் இரவில் படுக்கும் போது, பிராக்களை அணியாமல் இருந்தால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

ஒயின்

ஆராய்ச்சி ஒன்றில், சிறிய டம்ளர் ஒயினைக் குடித்தால், இருமடங்கு அதிகமாக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் 125 மிலி டம்ளர் ஒயின் குடித்தால், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் 168 சதவீதம் வரும் என்றும் சொல்கிறது.

ஜலதோஷம்

புதிய ஆய்வு ஒன்றில், குழந்தைப் பருவத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஜலதோஷமும் ஒரு காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய புற்றுநோயானது கர்ப்பத்தின் போது ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது அதிகப்படியான ஜலதோலத்தை சாதாரணமாக நினைத்து விடுவதால், அது லுகேமியா அல்லது மூளை கட்டிகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

டியோடரண்ட்

டியோடரண்ட்டில் அலுமினியம் அதிகம் இருப்பதால், அது மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையதாக புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சிப்ஸ்

பெற்றோர்கள் தினந்தோஷம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சிப்ஸ் கொடுத்தனுப்புவார்கள். ஆனால் அவ்வாறு வாரத்திற்கு 5 சிப்ஸ்களுக்கு மேல் சாப்பிட்டால், 27 சதவீதம் மார்க புற்றுநோய் வருவதாக, அதிர்ச்சியூட்டக்கூடிய விதமாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது.

வாய்வழி உறவு

வாய்வழி உறவு கொண்டால் தொண்டை புற்றுநோய் வருவதாக, ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் அந்த ஆய்வில் அவ்வாறு உறவு கொள்ளும் போது, பாபிலோமாவைரஸ் என்னும் தொண்டை புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் ஊடுருவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்வழி உறவினால் ஏற்படும் தொண்டை புற்றுநோய், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஏற்படும்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், நுரையீரல் புற்றோய் வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் 77,000 மக்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், வைட்டமின் ஈ அதிகம் உள்ளோருக்கு புற்றுநோய்த் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் சொல்கிறது.

சாசேஜ் மற்றும் பர்கர்

ஐரோப்பிய கமிஷன் ஒன்று, சிவப்பு நிறச் சாயம் சாசேஜில் பயன்படுத்தப்படுவதால், அதனை உட்கொண்டால், புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சூப்

தினமும் அதிக உப்பு போட்டு சூப் குடித்தால், வயிற்று புற்றுநோய் வருவதாக, நிபுணர் ஒருவர் சொல்கிறார்.

ஹேர் டை

பெண்கள் தொடர்ச்சியாக ஹேர் டை அடித்து வந்தால், அவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 15 வருடங்களாக ஹேர் டை பயன்படுத்தினால், மூன்று மடங்கு அதிகமாக புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாகவும், அந்த ஆய்வு சொல்கிறது.

சன் ஸ்க்ரீன் க்ரீம்

சன் ஸ்க்ரீன் க்ரீம்களை அதிகம் சருமத்தில் பயன்படுத்தினால், தோல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் எவ்வளவு தான் அவை சருமத்தினை பாதுகாத்தாலும், புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை முற்றிலும் தடுப்பதில்லை என்றும் சொல்கிறது.

எக்ஸ்ரே

உடலின் உள்ளுறுப்புக்களை படம் பிடித்து தெளிவாக காட்டும் எக்ஸ்ரே கருவிகளில் இருந்து வெளிவரும் கதிர்களால், புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரிட்டனில், இந்த எக்ஸ்ரேவினால், 700 பேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.

பவுடர்

தினமும் முகத்திற்கு போடும் பவுடர் முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டாலும், 40 சதவீதம் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று சொல்கிறது.

மாய்ஸ்சுரைசர்

பல மில்லியன் பெண்கள் தினமும் மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவ்வாறு மாய்ஸ்சுரைசரைப் பயன்ழுடுத்தினால் தோல் புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.

மொபைல் போன்

தொடர்ந்து 10 நிமிடம் மொபைல் போன்களை காதுகளில் வைத்து பேசினால், மூளையில் மாற்றங்கள் ஏற்பட்டு, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அதுவும் மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளைச் செல்களை பிரித்துவிடுவதாகவும் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சி

அதிகமான அளவில் மாட்டிறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிட்டால், புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிலும் மக்கள் மாட்டிறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி, சாசேஜ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று சொல்கிறது.

டூத் ஒயிட்னர்

பற்களை வெண்மையாக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால், அதில் உள்ள அதிகப்படியான ப்ளீச்சிங் தன்மை கூட புற்றுநோயை உண்டாக்கும். எனவே ஐரோப்பிய கமிஷன், பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் உள்ள ப்ளீச்சிங்கின் அளவை குறைத்து, தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.
அடடா... எதைத் தொட்டாலும் புற்றுநோய் என்றால், எதையுமே நிம்மதியாக செய்ய முடியாது போலிருக்கே... என்ன கொடுமை சார் இது.... இருப்பினும் நண்பர்களே! கவனமாக இருங்கள்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல