நோர்வேயில் வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகளாகிய தாமோதரம்பிள்ளை ஆனந்தராசா ரஜித்தா, ஆனந்தராசா எரிக்ஜோசப் டிலாந்தினி ஜோசப் மகாத்மாஜோதி செல்லத்துரை சித்திரா தேவி செல்லத்துரை வசந்த் குமாரன் ஷியாமலா வசந்தகுமாரன் ஆகிய நாங்கள் நான்கு குடும்பங்கள்.
எமது பிள்ளைகளை நோர்வேயின் சிறுவர் காப்பகங்களில் பறிகொடுத்து வருடக்கணக்காய் பறிதவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
நோர்வேயை பொறுத்தவரையில் இங்கு, அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. பெற்றோரிடமிருந்தும் பெற்றோர் அறியாத நிலையிரும் நோர்வே காப்பகங்களால் கவர்ந்து செல்லப்படுகின்ற குழந்தைகளை மீண்டும் தாய் தந்தையரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கம் இங்கு சிறுவர் காப்பகத்திடம் இல்லை.
தாய் தவறிழைத்திருந்தால் பிள்ளை தந்தையின் பராமரிப்பிலும் தந்தை தவறிழைத்தால் பிள்ளை தாயின் பராமரிப்பிலும் சேர்க்க வேண்டும். அப்படி இல்லாது தாய் தந்தை இருவருமே தவறிழைத்திருந்தால் காப்பகத்தால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுவே நோர்வேயின் சிறுவர் விவகாரம் தொடர்பிலான சட்டமாகும்.எனினும் அது இங்கு இடம்பெறவில்லை. மேலும் குழந்தைகளிடத்தில் பெற்றோர் தொடர்பில் தவறான எண்ணங்கள் ஊட்டப்பட்டு மூளை சலவை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
நோர்வேயில் சிறுவர் தொடர்பான இப்பிரச்சினை உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் நோர்வே மனித உரிமை விடயத்தில் சவாலுக்குட்பட்ட நாடாக அறியப்பட்டுள்ளது.
எமது பிள்ளைகளைப் பெறுவதற்கு பல போராட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம். எனினும் இதுவரையில் எமது பிள்ளைகள் வந்து சேரவில்லை.
நீதிமன்றில் 2013 ஏப்ரல் 08,09,10 ஆம் திகதிகளில் ழேசறயல டீநசபநn வுசiவெசநஉவ நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றின் போது நடைபெற்ற விசாரணைகளில் சிறுவர் காப்பகங்களால் பலவந்தமாக எடுத்து செல்லப்பட்ட குழந்தைகளிடம் மேற்கொண்ட விசாரணைகளில் குழந்தைகளின் கருத்துக்களில் நீதிமன்றம் திருப்திகொள்ளவில்லை.
அத்துடன் சிறுவர் காப்பகங்கள் தவறான முறையில் செயற்பட்டிருக்கின்ற விதமும் குழந்தைகள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதையடுத்து குறித்த குழந்தைகள் பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினை ஏற்றுக்கொள்ளாத நோர்வே சிறுவர் காப்பகம் நீதிபதிகளுக்கு எதிராகவே வழக்கு தொடர்ந்துள்ளது. நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்க்கும் ஒரு அநாகரிகமான செயற்பாடு நோர்வேயிலேயே இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகள் பெற்றுக்கொள்வதற்காக குறித்த பெற்றோர் மேல் நீதிமன்றங்களுக்கு செல்வதானாலும் அதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றன. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆநு வருடங்கள் என பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து தடுத்து தனித்து வைத்திருப்பதன் மூலம் குறித்த பிள்ளையின் தாய்மொழி, கலை கலாசாரம், நடைமுறை எனசகல விடங்களும் மறக்கடிக்கப்பட்டவர்பளாகவும் அந்த குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாகவும் ஆக்கப்படுகின்றனர்.எங்களது நிலைமைகளையும் எமது பிள்ளைகளின் மனோநிலையையும் கருத்திற்கொள்வீர்களென நினைப்பதுடன் அவர்களை மீட்டுத்தருவதற்கு ஆவண செய்வீர்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறோம்.
ஐயா,
தாமோதரம்பிள்ளை ஆனந்தராசா ரஜித்தா ஆனந்தராசா குடும்பத்தினரின்
ஆனந்தராசா தமிழினி (வயது 14) ஆனந்தராசா யாழினி (வயது 9)
ஆனந்தராசா தமிழ்ப்பிரியன் (வயது 07) ஆகிய நான்கு குழந்தைகளும்
எரிக் ஜோசப் டிலாந்தினி ஜோசப் குடும்பத்தினரின்
எரிக் ஜோசப் இணுக்கா (வயது 14) எரிக் ஜோசப் மொலோனி (வயது 10)
எரிக் ஜோசப் மெரியோ (வயது 07) ஆகிய மூன்று குழந்தைகளும்
மகாத்மா ஜோதி செல்லத்துரை சித்திராதேவி செல்லத்துரை குடும்பத்தினரின்
செல்லத்துரை நபீலா (வயது 07) செல்லத்துரை நிலோத் (வயது 05)
செல்லத்துரை நிமித்தா (வயது 04) ஆகிய மூன்று குழந்தைகளும்
வசந்தகுமாரன் ஷியாமலா வசந்த குமாரன் குடும்பத்தினரின்
வசந்தகுமாரன் ஷியாந்தன் (வயது 12) வசந்தகுமாரன் ஷண்ட்ஷியா (வயது 09)
ஆகிய இரு குழந்தைகளுமாக மொத்தம் 11 குழந்தைகளும்
நோர்வேயின் சிறுவர் காப்பகங்களிடம் பறிக்கொடுத்து நிற்கிறோம். கடந்த மூன்று வருடங்களாக எமது பிள்ளைகளை இழந்து நரக வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.எமது குழந்தைகள் உட்பட சுமார் 16 000 குழந்தைகள் இவ்வாறு நோர்வேநாட்டு கெடுபிடிகளில் சிக்கி பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதன் மூலம் அடிப்படை உரிமைகள் மனித உரிமைகள் மற்றும் சிறுவர் உரிமைகள சீரழிக்கப்பட்டுள்ளனர்..மேலும் எமது குழந்தைகள் கதறக் கதற சிறுவர் காப்பகத்தினால் பலவந்தமாக வேன்களில் ஏற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இத்தகைய செயற்பாடானது குழந்தைகளையும் பெற்றோரையும் மனதளவில் வெகுவாக பாதிப்படையச் செய்திருக்கின்றது.
எமது நாட்டின் இலங்கை கலாசாரத்திக் பிரகாரம் வளர்க்கப்பட்ட எமது குழந்தைகள் தற்போது நோர்வே நாட்டு கலாசாரத்துடன் வளர்க்கப்படுவதுடன் தமிழ் மொழியை உச்சரிப்பதற்கோ இலங்கை உணவான சோறு உண்பதற்கோ மறுக்கப்பட்டுள்ளது அது மாத்திரமின்றி நோர்வே மொழியில் மாத்திரமே பேசவும் எழுதவும் வேண்டுமென்ற கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக்கின்றன.எமது குழந்தைகளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஆனந்தராசா ரஜித்தா மற்றும் எரிக் ஜோசப் டிலாந்தினி ஆகிய தாய்மார் தொடர்ச்சியாக 10 தினங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் மேற்கொண்டிருந்தனர்.இதனையடுத்து மேற்படி தேவாலயத்தில் முக்கியஸ்தர்களும் ஆயரும் எமது குழந்தைகளை மீட்டுத்தருவதற்கு உதவி செய்வதாக உறுதியளித்தபோதிலும் அது இடம்பெறவில்லை.
ஐயா, நோர்வேயில் இருக்கின்ற பொலிஸார், சிறுவர் காப்பகங்கள், நீதித்துறை மற்றும் அரச உயர் மட்டம் என சகல தரப்பும் இவ்விடயத்தில் ஒரு கடும்போக்கினை கடைப்பிடித்து வருகின்றன. மேற்படி அனைத்து தரப்பும் வெளிநாட்டுப் பெற்றோராகிய பிள்ளைகளை இழந்து நிற்கும் எமக்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றன.எமது பிள்ளைகளை மீட்பதற்கு ஐ.நா.விடமும் உலக நாடுகளிடமும் முறையிட்டுள்ளோம். நோர்வே அரசாங்கம் இதனைக் கண்டும் காணதது போன்று தான்தோன்றித்தனமாகவும் அதிகாரத்தோணியிலும் செயற்பட்டு வருவதையிட்டு வெட்கப்படவேண்டியுள்ளது. எமது பிள்ளைகளை பலவந்தமாக எடுத்துச் சென்று தடுத்து வைத்திருக்க நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் காப்பகங்களுக்குதேவையிருக்கவில்லை. எனினும் அதனை செய்துள்ளன.
முமனித உரிமைகளை மதிப்பதாகவும் அதனை பாதுகாப்பதாகவும் உலகம் முழுவதும் தன்னை மனிதாபிமானியான காட்டிக் கொள்கின்ற நோர்வேயில் இவ்வாறு குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து பிரித்து இருதரப்பினரதும் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியிருக்கின்றமை இதன் மூலம் நன்கு தெளிவுபட்டிருக்கின்றது. குழந்தைகளை பலவந்தமாக எடுத்துச்செல்கின்ற சிறுவர் காப்பகங்கள் பெற்றோரின் மீது குற்றங்களை சுமத்துகின்ற அதேவேளை பிள்ளைகறை பெற்றோரிடத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகறை மேற்கொள்வதில்லை.மொத்தத்தில் வெளிநாட்டவர்களின் பிள்ளைகளுக்கே இந்த நிலைமை ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் நோர்வே பிரஜைகளுக்கு இங்கு அவ்வாறு இல்லை அதாவது சிறுவர்கள் தொடர்பிலான இங்குள்ள சட்டம் இன ரீதியாக பாவிக்கப்படுகிறமை அப்பட்டமாக தெரிகின்றது. நோர்வே பிரஜைகளுக்கு ஒருவிதமாகவும் வெளிநாட்டவருக்கு மறுவிதமாகவும் இங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதனால் பாதிப்படைந்த நூற்றுக்கணக்கான பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மேலும் நூற்றுக்கணக்கானோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகியுள்ளனர். இன்னும் பல தொழிலிலந்து பொருளாதார நிலைமையில் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்திலேயே நீயாயம் தீர்க்கப்படும் என்று அங்கு முறையிட்டால் அங்கிருந்தும் நீதி கிடைப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் விடுக்கின்ற அறிவித்தல்களை அல்லது உத்தரவுகளை சிறுவர் காப்பகங்கள் ஏற்றுக்கொள்ளவோ அதகை நடைமுறைப்படுத்தவோ முன்வருவதில்லை.இத்தகைய அவல நிலைக்கு மத்தியில் தற்போது நோர்வேயின் தலைநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் தமது பிள்ளைகளால் பறிகொடுத்துள்ள வெளிநாட்டுப் பெற்றோர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
எனவே எமது பிள்ளைகளை மீட்டுத்தருவதற்கு இலங்கையூடாக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு இலங்கைப்பிரஜைகள் என்ற ரீதியில் தயவாக கேட்டுக்கொள்கின்றோம். பிள்ளைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் பெற்றோர் பழிவாங்கலுக்குட்படும் நிலைமைகள் இங்கு அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் எமது பிள்ளைகளை மீட்டு தருவதற்கு சர்வதேச நாடுகள் ஊடாக அழுத்தங்கைளக் கொண்டுவருவதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எமதும் எம்மைப் பிரிந்து நிற்கும் பிள்ளைகளினதும் அவலத்தை போக்கி எமது பிள்ளைகளை மீட்டுத்தருவற்கு இலங்கை அரசு உதவி செய்யும் என்று நம்பிக்கையும் எமக்கு அதிகரித்துள்ளது.
எனவே ஐயா தாங்கள் எமது விடயத்தில் தயவாகவும் கருணை கூர்ந்து தலையீடு செய்து எமக்கு உதவி செய்வீர்கள் என்றும் எமது பிள்ளைகளை எம்மிடத்தில் பெற்றுத் தருவதற்கு இலங்கைப் பாராளுமன்றத்தினூடாக நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்றும் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் மிகப் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
By J.Stephan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக