சமீபகாலமாக உலகமெங்கும் நடக்கும் சைபர் கிரைமை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் ரகசியங்கள் திருட்டை தடுக்க ரஷிய அதிபர் மாளிகையில் கம்ப்யூட்டர்களுக்கு பதிலாக மீண்டும் டைப்ரைட்டர் எந்திரகள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது உபயோகிக்கும் கம்ப்யூட்டர்கள் பயன் பாட்டுக்கு வருவது முன்பு அலுவலகங்களில் டைப் ரைட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அவை ஓரங்கட்டப்பட்டு அனைத்து ஆவணங்களும் கம்ப்யூட்டர்கள் வழியாக தயாரிக்கப்படுகிறது.
இதனால், பல ரகசியங்கள் திருடப்படுகின்றன. விக்கி லீக் இணைய தளம் மூலம் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. மேலும் அமெரிக்க உளவுத்துறை வெளி நாட்டு தூதரங்களின் ரகசிய ஆவணங்கள் திருடியதை உளவுத்துறை முன்னாள் அதிகாரி அம்பலப்படுத்தினார்.
எனவே, ரஷிய அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு பதிலாக மீண்டும் டைப்ரைட்டர்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.10 லட்சம் செலவில் 20 எலெக்ட்ரானிக் டைப்ரைட்டர் எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. அதற்கான உத்தரவை அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார்.
இவை அதிபரின் கிரம்ளின் மாளிகை உள்பட முக்கிய அலுவலகங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.
ஆந்தை ரிப்போர்ட்டர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக