வெள்ளி, 5 ஜூலை, 2013

தர்மபுரி கலவரம்: திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் மர்மச் சாவு

தமிழகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது தருமபுரி காதல் ஜோடி – திவ்யா இளவரசன். இவர்களின் காதல் விவகாரத்தில் திடிரென்று திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், சம்பந்தப்பட்ட இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இளவரசனின் சடலம் தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து தர்மபுரி முழுவதும் பதட்டம் காணப்படுவதால். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பெண்ணின் தரப்பில் கடத்தல் என்றும், பையன் தரப்பில் காதல் என்றும் போலீஸ் நிலையத்தில் வாதிட்டனர். போலீசாரும் இளவரசனையும் திவ்யாவையும் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு கயிற்றில் உயிர் துறந்தார். அதன்பிறகு தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்த சாதி மோதல் வடமாவட்டங்கள் முழுவதும் பரவியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 4-ம் தேதி திவ்யா தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசில் இளவரசன் புகார் செய்தார். இதற்கிடையே திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டிற்கு வந்திருந்த திவ்யா, தனது தாயுடன் செல்ல விரும்புவதாக கூறினார். தன்னுடன் வரும்படி இளவரசன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் திவ்யா கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இதையடுத்து திவ்யாவை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று தாயாருடன் வந்திருந்த திவ்யா, இனிமேல் எந்த சூழ்நிலையிலும் காதல் கணவர் இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில், திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் தர்மபுரியில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தர்மபுரி அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிள், கைப்பை ஆகியவையும் கிடந்தன.

அவரது சட்டைப் பையில் இருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களைச் சேகரித்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை வாழ வைக்க ஒரு கோஷ்டியும், பிரித்து வைக்க ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டி வந்த நிலையில், இளவரசனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\இதையடுத்து தர்மபுரி முழுவதும் பதட்டம் காணப்படுவதால். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து இளவரசனின் நண்பர்கள் தெரிவிக்கையில், உறவினர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடும் என்றும், விபத்து ஏற்படுத்தியது போல் காட்ட முனைந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் பதட்டத்தில் இளவரசன் இருந்தான் என்றும், அவனை சமுதாயத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் முன்வரவில்லை என்றும், அதனாலேயே பெரும் மன உளைச்சலில் இருந்தான் என்றும் அங்கே கூடியிருந்த நண்பர்கள் கூறினர்.

ஆந்தைரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

2 கருத்துகள்:

  1. i need join your wed site..i am very like this page....what can i do join your website...please reply...
    thanks
    yours faithfully,
    s.saravanan,
    jay malar impx,
    dindigul,
    tamil nadu,
    india
    e.mail.sarojexports@gmail.com
    skype..sarojexports10

    பதிலளிநீக்கு

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல