புதன், 31 ஜூலை, 2013

வடகொரிய இராணுவத்தின் அணிவகுப்பில் கவனத்தை ஈர்த்த பெண்கள் படையணி


கொரிய போர் நிறைவு பெற்று 60 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் வட கொரி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவ அணி­வ­குப்பில் நூற்­றுக்­க­ணக்­கான பெண் படை வீரர்கள் கச்­சி­த­மாக அணி­வ­குத்துச் சென்­றமை அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்ப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது.

ஒரே­ய­ளவில் தமது கேசத்தை வெட்­டி­யி­ருந்த மேற்­படி பெண் படைவீரர்கள், தமது கால்­களை ஒரே சம­யத்தில் மேலே தூக்­கியும் கீழே வைத்தும் சென்று ரோபோக்கள் அணி­வ­குத்து செல்­வதைப் போன்ற ஒரு மாயத் தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

வட கொரிய தலை­ந­க­ரி­லுள்ள கிம் இல் சங் சதுக்­கத்தில் இந்த அணி­வ­குப்பு இடம்­பெற்­றது.

வட கொரிய இரா­ணு­வத்தில் 40 சத­வீ­த­மா­ன­வர்கள் பெண்கள் என கூறப்­ப­டு­கி­றது. அந்த வகையில் அந்­நாட்டின் 1.2 மில்­லியன் படை­யி­னரில் சுமார் அரை மில்­லியன் பேர் பெண்­க­ளாவர்.

வட கொரியா அண்­மையில் இந்தப் படை­ய­ணியில் சேர்ந்து கொள்­வ­தற்கு பெண்­க­ளுக்கு உய­ரத்தை 4 அடி 8 அங்­கு­ல­மாக குறைத்­தி­ருந்­தது.

அங்­குள்ள பெண்கள் வறு­மை­யான நிலை­மை­களில் பிறந்­துள்­ளதால் போஷாக்­கின்­மையால் வளர்ச்சி குறைந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­வ­தா­லேயே படை­ய­ணியில் பெண்­களை இணைத்துக் கொள்­வ­தற்கு தேவை­யான உய­ரத்தை வட கொரியா குறைத்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

படை­ய­ணிக்கு சேர்த்துக் கொள்ளும் பெண்­க­ளுக்கு அவர்­க­ளது பாட­சாலைக் காலத்­தி­லேயே 'அமெ­ரிக்­கர்­களை கொல்­கிறோம்', 'நாம் அமெ­ரிக்­கர்­களை கொன்­று­விட்டோம்' போன்ற ஆங்­கில வச­னங்கள் கற்றுக் கொடுக்­கப்­ப­டு­கி­றது. அதன் பின் அவர்கள் வரு­டாந்தம் 300 மணித்­தி­யால இரா­ணுவப் பயிற்­சிக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர்.

மேற்­படி பெண்­க­ளுக்கு தமது முழு சேவைக் காலத்தில் திரு­மணம் செய்­வது, பெற்றோர் ஒரு­வரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வது உள்ளடங்கலான 10 நாள் விடுமுறையை உள்ளடக்கி இரு வார விடுமுறையே வழங்கப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல