திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பாலியல் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்தார் மொராக்கோ நாட்டு மன்னர்

குழந்தைகளை தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஸ்பெயின் நாட்டவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை மொராக்கோ நாட்டு மன்னர் திரும்பப்பெற்றுக்கொண்டார்.

நான்கிலிருந்து 15 வயதிற்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய டேனியல் கால்வன் ஃபீனா என்ற அந்த நபருக்கு ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற 48 ஸ்பெயின் நாட்டு குற்றவாளிகளோடு டேனியல் கால்வன் ஃபீனாவும் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மொராக்கோ நாட்டிற்கு வருகை புரிந்த ஸ்பெயின் மன்னர் ஜூவான் கார்லோஸ் வேண்டுகோளின் பேரில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதனால் டேனியல் (Daniel)-லும் விடுவிக்கப்பட்டதால் கொதிப்படைந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடையவே காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

டேனியல் (Daniel) செய்த குற்றத்தின் தீவிரம் தமக்கு தெரியவில்லை என்றும், ஸ்பெயின் சென்றுவிட்ட அவர் மீண்டும் தண்டனையை அனுபவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மொரக்கோ மன்னர் முகமது உறுதியளித்தார்.

தாம் அரியணை ஏறிய நாள் உள்ளிட்ட சில சிறப்பு தினங்களில் சிறை கைதிகளுக்கு மன்னர் பொது மன்னிப்பு வழங்குவது அந்நாட்டிலுள்ள் பழக்கமாக இருந்து வருகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல