ஜெர்மனியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி, 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்ட நிலையில் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில் அதன் தலை மட்டும் உண்மையானது என்றும், உடல் பகுதி வெறும் பிளாஸ்டிக் என்றும் சோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் 10 வயது சிறுவன் ஒருவன் வட ஆப்ரிக்க மம்மியின் உடலை தனது குடியிருப்பில் கண்டுபிடித்ததாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெர்மனியின் லோவர் சாக்ஸோனி (Lower Saxony) குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் மாடியறையில் இருந்த கனமான ஒரு மரப்பெட்டியின் உள்ளே இருந்த இந்த மம்மியை (Mummy) கண்டுபிடித்தான் அந்த சிறுவன்.
இந்த மம்மியின் உடல் இருந்த மரப்பெட்டியானது எகிப்தில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தவரகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த மம்மி குறித்து நடத்தப்பட்ட சோதனையில் இதன் உடலானது வெறும் பிளாஸ்டிக் என்றும் ஆனால் இதன் தலைப்பகுதியானது உண்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மண்டைப்பகுதியானது மருத்துவ மாணவர்களின் சோதனைக்கு உதவும் என்பதால் ஆது மட்டும் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த மம்மியானது சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உடல் என்பது உறுதியாகியுள்ளயு. ஆனால் மாடி அறையில் ஒரு மரபெட்டுக்குள் இருந்த இது, எவ்வாறு இத்தனை காலம் யாரும் பார்க்கப்படாமல் இருந்தது என்பது மர்மமாக உள்ளது.
மேலும் அந்த மண்டை ஓடு யாருடையது? அதை யார் பாதுகாத்தார்கள் என்பதன் மர்மம் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக