வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளுக்கு பெரும் தொல்லையாக இருந்த சிவாஜிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் தொல்லை ஒன்று கழிந்தது என வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாராட்டு தீர்மானம் ஒன்றையும் வல்வெட்டித்துறை நகரசபை கடந்த 24ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராகக் கடமையாற்றிய ம.க.சிவாஜிலிங்கம் அவர்களுக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் பாராட்டுத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. கடந்த 24.09.2013 திங்கட் கிழமை நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்வு ந.அனந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொழுது,தலைமையுரை ஆற்றும் பொழுது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக இச் சபையின் உறுப்பினராகச் சேவையாற்றிய சிவாஜிலிங்கம் அவர்கள் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டமையையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
மாகாணசபையினூடாக எமது இனத்திற்கும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கும், எமது நகராட்சி மன்றத்திற்கும் தன்னால் முடிந்த சேவைகளைத் தொடர்ந்தும் ஆற்ற வேண்டும். அதே வேளை கடந்த தேர்தலில் எமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த கட்சி;க்காகவும், தமது விருப்பு வேட்பாளர்களுக்காகவும் உழைத்து இந்த வெற்றிக்காகப் பாடுபட்டாலும், எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பேதங்களைப் புறந் தள்ளி விட்டு எமது நகரத்தின் ஒற்றுமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைந்து பாடுபட மேலும் கடுமையாக உழைக்க முன்வரவேண்டும்.
இக்கூட்டம் முடிந்த பின் கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் சிலர் தாம் சிவாஜிலிங்கம் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டதை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், நகரசபை தலைவர் பதவியை தனக்கு தருமாறு பிரச்சினைகளை கிளப்பி நகரசபையை இயங்க விடாது குழப்பி வந்தவர் வல்வெட்டித்துறை நகரசபையிலிருந்து நீங்கியது மகிழ்ச்சி தருவதாகவும், இனி தமக்கு பெரிய தொல்லை நீங்கி விட்டதாகவும் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் பதவியை தனக்கு தரவேண்டும் என தொல்லை கொடுத்து வந்த சிவாஜிலிங்கம் எதிர்காலத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் பதவியை தனக்கு தர வேண்டும் என தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக