சனி, 28 செப்டம்பர், 2013

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? அப்ப இந்த காலத்துல முயற்சி செய்யுங்க!!!

சிலர் கர்ப்பமாவது என்பது மிகவும் ஈஸியானது என்று சொல்வார்கள். அதிலும் சரியான காதலுடன் உறவில் ஈடுபட்டால், நிச்சயம் கர்ப்பமடையலாம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த செயல் அனைவருக்கும் பொருந்தாது. ஒருசிலருக்கு கர்ப்பமடையவதே கஷ்டமானதாக இருக்கும். அவ்வாறு கர்ப்பமாவதில் கஷ்டப்படுபவர்கள், கர்ப்பமாக முயற்சிக்கும் முன் பல விஷயங்களை மனதில் கொண்டு முயற்சிக்க வேண்டும். அவற்றில் ஒன்று தான் மேலே சொல்லப்பட்ட உடலுறவு.

உடலுறவு கொண்டால் மட்டும் யாராலும் எளிதில் கர்ப்பமாக முடியாது. அதற்கென்று உள்ள காலத்தில் உறவு கொண்டால் தான் எளிதில் கர்ப்பமாக முடியும். அதற்கு முதலில் மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெற வேண்டும். அவ்வாறு முறையாக மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், மாதவிடாய் சுழற்சி நெருங்கும் சில நாட்களுக்கு முன்னர் உறவில் ஈடுபட வேண்டும். எத்தனை நாட்களுக்கு முன்னர் என்று பலர் மனதில் கேள்வி எழும்.

பொதுவாக மாதவிடாய் சுழற்சிக்கு முன்னர் ஒருசில அறிகுறிகள் தென்படும். அத்தகைய அறிகுறிகளின் போது, உடலுறவில் ஈடுபட்டால், நிச்சயம் எளிதில் கருத்தரிக்கலாம். சரி, இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!

மாதவிடாய் நாட்களுக்கு முன்னர் அடிவயிற்றில் லேசான பிடிப்புக்கள் உணர்ந்தால், அப்போது உறவில் ஈடுபட்டால், நிச்சயம் எளிதில் கருத்தரிக்கலாம்.

மற்ற நாட்களை விட மாதவிடாய் நெருங்கும் நாட்களில் பிறப்புறுப்பில் அதிகப்படியான ஈரத்தை உணர நேர்ந்தால், இதுவும் சரியான நேரம் என்பதற்கான அறிகுறியாகும்.

மாதவிடாய் நெருங்கும் காலத்தில் வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் மார்பகம் மென்மையாகுதல். மேலும் இந்நேரத்தில் ப்ராவை அணிந்தால், மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனெனில் இந்த காலத்தில் உடலில் உள்ள புரோஜெஸ்டிடோன் அளவு அதிகரிப்பதால், மார்பகம் மென்மையடைகிறது.

மாதவிடாய் நெருங்கும் காலத்தில் பெண்களுக்கு ஒரு கட்டத்தில் அதிகப்படியான காதல் உணர்ச்சி எழும். இவ்வாறு உணரும் போது, உறவில் ஈடுபட்டால், நிச்சயம் கருத்தரிக்கலாம்.

மாதவிடாய் காலம் நெருங்கும் காலத்தில் ஹார்மோன்களானது மாதவிடாய் சுழற்சிக்கு தயாராக இருப்பதால், வயிற்றில் ஒருவித வீக்கத்தை ஏற்படுத்தும்.

உணவைப் பார்த்ததும் சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் அந்த உணவு வயிற்றினுள் சென்ற பின்னர் குமட்டலை ஏற்படுத்துவது போன்ற உணர்வை உண்டாக்கும். இத்தகைய அறிகுறி ஒருசில பெண்களுக்கு மாதவிடாய் நெருங்கும் காலத்தில் ஏற்படும்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல