சனி, 28 செப்டம்பர், 2013

இப்படியும் ஏமாற்றுகின்றனர்!




பாவனையாளர்கள் ஐ.ஓ.எஸ் 7 இயங்குதளத்துக்கு தங்களது அப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்டினை மேம்படுத்துவதன் மூலம் அவை 'வோட்டர் புரூப்' எனப்படும் நீரினால் பாதிப்படையாதவையாக மாற்றிக்கொள்ள முடியும் என்ற போலி விளம்பரமொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், பார்ப்பதற்கு அப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்படுவது போன்றே மேற்படி விளம்பரமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சமூகவலையமைப்புகளில் இவ்விளம்பரம் காட்டூத் தீபோல பரவியிருந்தது.

அப்பிள் நிறுவனம் அண்மையிலேயே ஐ.ஓ.எஸ்.7 இயங்குதளத்தினை வெளியிட்டது.

இந்நிலையில் இவ்விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்த பலர் ஐ.ஓ.எஸ் 7 ஐ தமது சாதனங்களுக்கு தரவேற்றி பின்னர் நீருக்குள் இட்டு அதனை பரிசோதித்து ஏமாற்றமடைந்துள்ளனர்.மேலும் அவர்களது சாதனங்களும் பழுதடைந்துள்ளன.

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட விஷமிகள் சிலரே இதனைச் செய்துள்ளனர்.

இதனால் பலர் ஏமாற்றமடைந்த பலர் தங்களது கோபத்தினை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல