ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வேர்ட் 2007ல் ஷார்ட் கட் கீக்களின் தனித் தோற்றம்

ஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள், முன்பு வந்த வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2000 ஆகியதொகுப்புகளில் உள்ளது போலவே இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிறப்பான தோற்றம் உள்ளது. முந்தைய வேர்ட் தொகுப்புகளில், நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+பி (Ctrl+B) அழுத்தினால் எழுத்துக்களை போல்ட் செய்திட, கண்ட்ரோல் + சி (Ctrl+C) அழுத்தினால் காப்பி செய்திட என்பவற்றை மனதில் வைத்துப் பயன்படுத்துவோம்.

வேர்ட் 2007 பதிப்பில் இந்த மனப்பாட வேலை எல்லாம் தேவை இல்லை. இவை அனைத்தும் வேகமாகத் திரையில் காட்டப்படுகின்றன. ஆல்ட் மற்றும் பிற தொகுப்பு முன் கீயினை அழுத்துகையில் இந்த எழுத்துக்கான கீயுடன் இணைந்த மற்ற எழுத்துக்களின் இணைப்புடன் அவற்றில் மேற்கொள்ளப்படும் செயல் முறையும் காட்டப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, ஆல்ட் (Alt)கீயினை அழுத்தினால், டூல்பார் பட்டன்களுக்கு மேலாக இந்த செயல்முறைகள் தோன்றும்.

AltF = Office Button

Alt1 = Save

Alt2 = Undo

Alt3 = Redo

AltH = Home

AltN = Insert tab

AltP = Page Layout tab

AltS = References tab

AltM = Mailings tab

AltR =Review tab

AltV =View tab

AltL = Developer tab

இதே போல மற்ற கீகளுக்குமான செயல்முறைகளை, அந்த அந்த கீ அழுத்திக் காணலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல