ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நிறைவேறியது மூதூர் ரிஸானாவின் கனவு இல்லம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிரச் சேதம் செய்யப்பட்ட மூதூர் ரிஸானாவின் வறிய குடும்பத்துக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு இது.

இராணுவம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து இவ்வீட்டை கட்டிக் கொடுத்தனர்.

குடும்பத்துக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்க வேண்டும், அப்பா, அம்மா சகோதரர்களை இங்கு குடியேற்ற வேண்டும் என்பது ரிஸானாவின் கனவாக இருந்தது.

ஆயினும் ரிஸானாவின் மரணத்துக்கு முன் வீட்டைக் கட்டிக் கொடுக்க மேற்சொன்ன இரு தரப்பினர் மாத்திரமே முன் வந்து இருந்தனர்.

இன்று இவ்வீடு உத்தியோகபூர்வமாக ரிஸானா குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க கலந்து கொண்டார். மட்டும் அன்றி இராணுவ உயரதிகாரிகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், சமய தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல