ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வாய்ப்புண்ணை கட்டுப்படுத்தும் சீரகம்

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களில் ஒன்று தான் சீரகம். சீரகம் என்றால் உடலை சீர் படுத்தக் கூடியது. சீரகத்தை பொடி பண்ணி எடுத்து 1 கிராம் - முதல் 3 கிராம் வரை சாப்பிடலாம். இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலைச் சுரக்க வைக்கும். பித்தத்தை சமப்படுத்தும். ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும். ஈரலைப் பலப்படுத்தும். சீரகம் உணவுப் பொருளாகவும் , மருந்துப் பொருளாகவும் இருக்கின்றது.

தேநீர்

பொடித்த சீரகத்தை எடுத்து, எலுமிச்சை சாறு, உப்பு போட்டு போதியளவு தண்ணீர் சேர்த்து பருகவும். (ருசிக்கேற்ப உப்பு சேர்க்கவும்) செரிமானத்தை வேகப்படுத்தும். இரவு நேரம் பணிபுரிபவர்களுக்கும் குளிர் நிலையில் வேலை செய்பவர்களுக்கும் இது நல்லது.

ஜீரா மில்க்

சீரகம் 1மேசைக் கரண்டி எடுத்து கருகாமல் வறுத்து எடுக்கவும். வறுக்கும் போது சீரக வாசனை வரும். கருகக் கூடாது. பொரியும் சத்தம் கேட்கும் போது எடுக்கவும். 1டம்ளர் தண்ணீர் விட்டுகொதிக்க விடவும். அதன் சாறு இறங்கும் வரை கொதிக்க விட்டு இறக்கி ஆறிய பின்பு வடிகட்டி எடுக்கவும். வடிகட்டிய சாற்றில் தேங்காய் பால் 1 கப் சேர்த்து, 1 அல்லது 2 தேக்கரண்டி பனங்கற்கண்டு தூளைச் சேர்த்து கலக்கி பருகவும். பிரசவ வலி எடுப்பவர்களுக்கு இந்தக் கலவையைக் கொடுத்தால் உண்மையான வலியா, பொய்யான வலியா எனக் கண்டு பிடிக்க முடியும். இதில் கல்சியம், பைபர், பொஸ்பரஸ் உண்டு. கர்ப்பப்பை பிரச்சினைக்கும், தோல் வியாதிக்கும் நல்லது. வாய்ப்புண், வயிற்று உப்புசத்திற்கு நல்லது. வாய் நாற்றத்திற்கு சீரகத்தை வாயில் போட்டு மெல்லவும். பித்த மயக்கம், அல்சர், மூட்டுவலிக்கு நல்லது. மூக்கு ஒழுகுதலிற்கு சீரகத்தை தட்டி எடுத்து மூட்டை மாதிரி கட்டி எடுத்து அதை மூக்கு துவாரத்தில் வைத்து உறிஞ்சி பாவிக்கும் போது மூக்கு ஒழுகுதல் சீராகும்.

சோம்பு

சீரகத்தில் பெரியதை பெருஞ்சீரகம் என்று சொல்வார்கள். பெருஞ்சீரகத்தை சோம்பு என்றும் சொல்வார்கள். இதை உணவில் சேர்த்து வரும் போது குடற் புண்களை ஆற்றக் கூடியது. இதயக் கோளாறுகள், ஈரல் கோளாறுகள் அனைத்தையும் மாற்றக் கூடிய தன்மை உண்டு. இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது.கொலஸ்ட்ரோல் என்கின்ற கொழுப்புச்சத்தை குறைக்கக் கூடியது. மொத்தத்தில் அகத்தினுள்ளே இருக்கின்ற உறுப்புக்களை சீர்செய்யக் கூடியது. அதனிலும் இது பெருஞ்சீரகம் என்று சொல்கின்ற பொழுது அதனிலும் ஒரு பெரிய பங்கு மருத்துவம் கொண்டதாக உள்ளது.

சோம்பு தேனீர்

½ டம்ளர் தண்ணீர்,1தேக்கரண்டி சோம்பு, போட்டு கொதிக்க விடவும். அதனுடன் சிறிது ஏலக்காய் போட்டு சாறு ...இறங்கும்வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி ருசிக்கேற்ப பனை வெல்லம்சேர்த்து பருகவும். இது வயிற்று நோயை போக்கும். புண்களை ஆற்றக்கூடியது. சிறுநீரை சீராக வெளியேற்றக் கூடியது. உடலுல் சேர்ந்த நீரை வெளியேற்றக் கூடியது.ஏலக்காய் இதமாக , இனிமையாகவும், உள் உறுப்புக்களை தூண்டக் கூடியது. எல்லோரும் சாப்பிடலாம். வயிற்றிலுள்ள அழுக்குகளை வெளியே தள்ளும். சலப் பையிலுள்ள அழுக்கை வெளியேற்றும். கருவுற்றவர்களுக்கு கை, காலில் வீக்கம் காணப்படும். அவர்களுக்கு இந்த சோம்பு தேநீரை பருகக் கொடுக்கவும். நுரையீரலில் ஏற்படுகின்ற தொற்று கிருமிகளை போக்கக் கூடியது. குழந்தைகள் வயிற்றுவலி, சிறுநீர் போகாத நிலையில் வயிற்றை முறுக்கி அழும் போது இந்த தேநீரை கொடுக்கலாம்.

சோம்பு பைன் ட்ரிங்க்

1 டம்ளர் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து வறுத்த சோம்பு பொடி 1 தேக்கரண்டி, வறுத்த கொத்த மல்லி பொடி 1 தேக்கரண்டி, சுக்கு பொடி ¼ தேக்கரண்டி, வால் மிளகுப் பொடி ¼ தேக்கரண்டி போட்டு, துளசி இலை 5 போட்டு அதன் சாறு இறங்கும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி அன்னாசி சாறு 1 கப் சேர்த்து பருகவும். சோம்பு நீண்ட நாள் வாழவைக்கக் கூடியது. நெஞ்சு வலியைத் தடுக்கும். கொழுப்பைக் கரைக்கும்.சிறுநீரக கற்களைக் கரைக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கு தேநீர் மாதிரி போட்டு குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கருஞ்சீரகம்

சீரகத்தை போன்ற தன்மை உடையது. பூச்சி கொல்லியாக பயன்படுகின்றது.உள் உறுப்புகளிலுள்ள அழுக்குகளை வெளியே தள்ளும். தளர்ந்த உறுப்புக்களுக்கு பலம் தரும். வீக்கங்கள் கரையக் கூடும். விதை வீக்கத்திற்கு 1 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க விட்டு, கருஞ்சீரகத்தை பொடி செய்து 1 தேக்கரண்டி போட்டு 3 பூண்டை நசுக்கிப் போடவும். மிளகுப் பொடி காரத்திற்கேற்ப, (கருஞ்சீரகம் கசப்புத் தன்மையுடையது. ) உப்பு சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி உணவிற்கு முன்பு பருகவும். தினமும் சாப்பிட்டால் இடுப்பு வலி, அண்டவாயு விரை வாதம், ஆசனவாயில் நமைச்சல் போன்றவை குணமாகும்.

பாட்டி வைத்­தியம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல