புற்றுநோய்க்கான தொண்டு ஸ்தாபனமொன்றுக்கு நிதி சேகரிக்கும் முகமாக புகையிரத பாலமொன்றில் நடந்த பெண்ணொருவர், அந்தப் பாலம் எதிர்பாராத வகையில் உயர்த்தப்பட்டதால் தரையிலிருந்து 22 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
வன்டா மக்கோவன் (55 வயது) என்ற மேற்படி பெண், புகையிரதப் பாதை பாலத்தைப் பயன்படுத்தி நியூ ஆற்றைக் கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வன்டா உயிராபத்து மிக்க சூழ்நிலையில் துரிதமாக செயற்பட்டு பாலத்தினை இறுகப் பற்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அவர் அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிரதேசவாசிகள் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பு விடுத்ததையடுத்து வன்டா பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது அபாயகரமான புகையிரதப் பாலத்தில் எதுவித முன்னறிவிப்புமின்றி கடந்தமைக்காக அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக