செவ்வாய், 15 அக்டோபர், 2013

காதலனை நடு வீதியில் மண்டியிட வைத்து அறைந்த காதலி கைது

தனது காதலனை வீதியில் மண்டியிடச் செய்து அவரது முகத்தில் திரும்பத் திரும்ப அறைந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஹொங்கொங்கில் இடம் பெற்றுள்ளது.

செங் (20 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தனது காதலரான சுயியை (23 வயது) பொது இடத்தில் வைத்து தாக்கியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஹொங்கொங்கில் பொவ்லூன் பிரதேசத்தில் இருந்த மாடிக் குடியிருப்பிலுள்ள தனது வீட்டிற்கு செங்கின் அனுமதியின்றி யுவதியொருவரை அழைத்து வந்ததையடுத்தே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந் நிலையில் சுயியை எதிர் கொண்ட செங் அவர் தனக்கு துரோகம் செய்து வேறொரு பெண்ணுடன் காதல் தொடர்பை எற்படுத்திக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்பின் சுயியை வீதியில் மண்டியிட பணித்த செங் அவரை அறைய ஆரம்பித்துள்ளார். இதன் போது சுயி என்னை அடிக்கும் முன் நான் சொல்வதைக் கேள் என்ற கெஞ்சியுள்ளார். ஆனால் செங்கோ அவர் கூறுவதை செவிமடுக்க மறுத்து நீ எனக்கு துரோகம் செய்கிறாய் என கூச்சலிட்டுள்ளார்.




இதன் போது சுயியை செங் அறைவதை தடுக்க முயன்ற பாதசாரி ஒருவரை இது என் சொந்தப் பிரச்சினை நீ உன் பிரச்சினையைப் பார்த்துக் கொண்டு போ என செங் திட்டியுள்ளார். இந்நிலையில் பிறிதொரு பாதசாரி பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கவும் செங் கைது செய்யப்பட்டார்.

சுயியை செங் தாக்கியது முதற் கொண்டு செங் கைது செய்யப்படும் வரை அவர்கள் இருவரதும் அருகில் சுயியால் அழைத்து வரப்பட்ட பெண் செய்வதறியாது திகைப்படைந்த நிலையில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. மோசமாக அறையப்பட்டதால் கன்னம் வீங்கி காயமடைந்த செங் சிகிச்சைக்காக குயீன் எலிஸபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல