செவ்வாய், 15 அக்டோபர், 2013

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் செல்களில் தேவையற்ற இடைவெளி நீக்க: எக்ஸெல் ஒர்க்புக்கில், சிலர், வேறு புரோகிராம்களிலிருந்து தகவல்களைக் கொண்டு வருவார்கள். இவற்றினை செல்களில் அமைக்கையில், தேவையற்ற கூடுதல் இடைவெளிகளை (extra spaces) எக்ஸெல் அமைக்கும். சில செல்களில் இந்த ஸ்பேஸஸ் மட்டுமே இருக்கும். அந்த செல்கள் காலியாக இருப்பது போலக் காட்சி அளிக்கும். ஆனால், அவை காலியான செல்கள் இல்லை. இது, அந்த ஒர்க்புக்கினை தொடர்ந்து பயன்படுத்துகையில், குழப்பத்தினை ஏற்படுத்தும். எனவே, ஏதேனும் ஒரு வழியில் இந்த தேவையற்ற காலி இடங்களைக் காலி செய்தாக வேண்டும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

முதல் வழி இதில் தரப்படும் Find and Replace என்ற வழியைப் பயன்படுத்துவதுதான். இதில் கீழே குறிப்பிட்டபடி செயலாற்றவும்.

1. முதலில் Ctrl+H கீகளை அழுத்தவும். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸின் Replace டேப் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்படும்.

2. அடுத்து Find What பாக்ஸில், இரண்டு ஸ்பேஸ் அமைக்கவும்.

3. Replace With பாக்ஸ் காலியாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

4. அடுத்து Match Entire Cell Contents என்ற செக் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

5. Replace All என்பதில் கிளிக் செய்திடவும்.

6. அடுத்து மேலே கூறப்பட்ட நிலை 2 முதல் 5 வரை மீண்டும் செயல்படுத்தவும். ஆனால், இந்த முறை நிலை 2ல் ஒரே ஒரு ஸ்பேஸ் விடவும்.

7. Find and Replace டயலாக் பாக்ஸை மூடவும்.

இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஒர்க்ஷீட்டில் Trim என்று ஒரு பங்சன் உள்ளது. அதனைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஸ்பேஸ் நீக்கவேண்டிய செல்கள் அனைத்தும் ஒரே ஏரியாவில் இருந்தால், இந்த பங்சன் கட்டளை மிக வசதியாக இருக்கும். அல்லது ஒரே நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையாக இருந்தாலும் நல்லது. விரைவாக வேலையை மேற்கொள்ளலாம். நெட்டு வரிசை ஈல் உள்ள செல்களில் உள்ள காலி ஸ்பேஸ்களை நீக்க விரும்பினால், =Trim(D1) என்ற கட்டளையைக் கொடுக்க வேண்டும். இந்த பங்சன் செல்லில் உள்ள ஸ்பேஸ்களை நீக்கும். பின்னர் இந்த நீக்கப்பட்டதனைக் காப்பி செய்து, பேஸ்ட் ஸ்பெஷல் கட்டளை மூலம் மற்ற செல்களிலும் அமைக்கலாம்.

கிழமைகளில் முதல் எழுத்து தானாக மாற: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், ஏதேனும் ஒரு செல்லில், வார நாட்களை டைப் செய்தால், அதன் முதல் எழுத்து பெரிய எழுத்தாக (capital) தானாக மாறும் வசதி தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் “wednesday” என டைப் செய்தால், அது தானாகவே “Wednesday” என மாறும். இது உங்கள் எக்ஸெல் புரோகிராமில் மாற்றப்படவில்லை என்றால், அதனை இயக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.

1. Excel Options டயலாக் பாக்ஸை முதலில் இயக்கவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 எனில், ரிப்பனுடைய File டேப்பினைத் தேர்ந்தெடுத்து பெறலாம்.

2. டயலாக் பாக்ஸின் இடது புறத்தில், உள்ள Proofing என்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.

3. இங்கு உள்ள AutoCorrect Options பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் Auto Correct டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

4. இதில் Capitalize Names of Days என்று உள்ள இடத்தில் செக் பாக்ஸினைக் காணவும். இந்த வசதி உங்களுக்குத் தேவை எனில், இதில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். வேண்டாம் என்று விரும்பினால், அடையாளத்தை எடுத்துவிடவும்.

டாஸ்க் பாரில் எக்ஸெல் ஒர்க் புக்: எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், அதில் உருவாக்கப்படும் ஒர்க்புக்குகள், டாஸ்க்பாரில் எப்படி காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் முடிவு செய்து, நம் விருப்பப்படி செட் செய்திடலாம். நாம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளை இயக்கிக் கொண்டிருந்தாலும், இவை அனைத்தும் ஒரே ஒரு பட்டனில் அடங்கி டாஸ்க்பாரில் காட்சி அளிக்குமாறு செய்திடலாம். அல்லது, ஒவ்வொரு ஒர்க்புக்கிற்கும் ஒரு பட்டன் இருக்குமாறு செய்திடலாம். இதனைக் கீழே குறிப்பிட்ட வகையில் செட் செய்திடலாம்.

1.Excel Options டயலாக் பாக்ஸை முதலில் இயக்கவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 எனில், ரிப்பனுடைய File டேப்பினைத் தேர்ந்தெடுத்து பெறலாம்.

2. இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் Advanced என்று இருக்கும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

3. இதில் தொடர்ந்து கீழாகச் சென்றால், அங்கு Display குரூப் என்று ஒரு பிரிவினைக் காணலாம்.

4. இங்கு Show All Windows in the Taskbar என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் டிக் செய்தால், நீங்கள் விரும்பியபடி தனித்தனியே ஒவ்வொரு ஒர்க் புக்கிற்கும் ஒரு பட்டன் டாஸ்க்பாரில் காட்சி அளிக்கும்.

5. டிக் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

எக்ஸெல் ஷார்ட் கட் கீகள்: காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல் + ஷிப்ட் + ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.

Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல