வேர்ட் டாகுமெண்ட்டில், நாம் குறிப்பிட்ட பக்கம் செல்ல, வலது பக்கம் இருக்கும் ஸ்குரோல் பாரில், ஸ்லைடரை இழுத்து, குறிப்பிட்ட பக்கம் வரும்போது நிறுத்தி இயங்குவோம். இது பக்கம் என்ன என்று தெரிந்தால், நாம் மேற்கொள்ளும் செயல்பாடு. ஒருவர் டாகுமெண்ட் ஒன்றின், 42 சதவீத இடம் தாண்டிச் சென்று, ஒரு பத்தியைக் காண வேண்டும் என நினைத்தால் முடியுமா?
எடுத்துக் காட்டாக, 234 பக்கம் இருக்கும் டாகுமெண்ட் ஒன்றில், 42 சதவீத இடம் தாண்டிச் சென்று பார்க்க வேண்டும் என எண்ணினால், பக்கம் அளவு பார்த்துத் தர வேண்டுமா?
அல்லது அப்படியே 42% என செட் செய்து கேட்டால் கிடைக்குமா? கிடைக்கும். வேர்ட் இந்த வசதியும் தருகிறது.
இதற்கு வேர்ட் தரும் Go To செயல்பாட்டினைப் பயன்படுத்த வேண்டும். இதனை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு F5 கீயை அழுத்தவும். வேர்ட் Find and Replace டயலாக் பாக்ஸில், Go To டேப்பினைக் காட்டும்.
2. இதில் நமக்கு Page என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
3. இதில் தரப்படும் டெக்ஸ்ட் பாக்ஸில், எத்தனை சதவீத டெக்ஸ்ட் தாண்டி நீங்கள் செல்ல வேண்டும் என்பதனை அமைக்கவும். எடுத்துக் காட்டாக, 35% டெக்ஸ்ட் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால், அதனை %35 அல்லது 35% என அமைக்கலாம். அமைத்து Go To தட்டினால், டாகுமெண்ட்டின் 35% பகுதி தாண்டி, நமக்கு டெக்ஸ்ட் கிடைக்கும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சுருக்கமாக சில குறிப்புகள்
வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஷிப்ட் + ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள்.
அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக