ஞாயிறு, 6 அக்டோபர், 2013

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்

டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையில் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்கலாம். இருப்பினும் அனைத்தும் இங்கே ஆங்கில அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளன.

Ctrl+a டாகுமெண்ட் முழுவதும் தேர்ந்தெடுக்க

Ctrl+b தேர்ந்தெடுத்ததனை போல்ட் வகையில் அழுத்தமாக அமைக்க

Ctrl+c காப்பி செய்திட

Ctrl+d கேரக்டர் பார்மட் (எழுத்துவகை) மாற்றிட

Ctrl+e தேர்ந்தெடுத்தனை நடுமையத்தில் சீர் செய்து அமைத்திட (Center)

Ctrl+f தேடிக் கண்டுபிடிக்க கட்டம் தரப்படும். இதில் தேடிக் கண்டறிந்ததற்குப் பதிலாகவும் சொற்களை அமைக்கலாம். இந்தக் கட்டளையை மீண்டும் மீண்டும் அமல்படுத்த Alt+Ctrl+y தரலாம்.

Ctrl+g குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல. இங்கு பக்கம், பிரிவு, வரி எண் எனப் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். இதனை எப் 5 கீ அழுத்தியும் பெறலாம்.

Ctrl+h நீக்கியபின்னர் அல்லது கண்டறிந்த பின்னர் அமைக்க வேண்டிய சொற்களை அமைக்க

Ctrl+i சாய்வெழுத்து வகையில் பார்மட் செய்திட

Ctrl+j பாரா ஒன்றை இரு மார்ஜின்களிலும் சமமாக அமையும்படி அமைக்க

Ctrl+k ஹைப்பர் லிங்க் இணைக்க

Ctrl+l பாரா ஒன்றினை இடது பக்கம் அலைன் செய்திட

Ctrl+m பாரா ஒன்றில் இடது பக்கம் இருந்து இன்டென்ட் அமைத்திட

Ctrl+n புதிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க

Ctrl+o டாகுமெண்ட் ஒன்றைத் திறந்திட

Ctrl+p டாகுமெண்ட் ஒன்றை அச்சிட

Ctrl+q பாரா பார்மட்டிங் செய்ததை நீக்க

Ctrl+r பாரா ஒன்றினை வலது பக்கமாக நிலைப்படுத்த

Ctrl+s டாகுமெண்ட் ஒன்றைத் தானாக சேவ் செய்திட

Ctrl+t ஹேங்கிங் இன்டென்ட் அமைக்க

Ctrl+u அடிக்கோடிட

Ctrl+v ஒட்ட

Ctrl+w டாகுமெண்ட் ஒன்றை மூட

Ctrl+x நீக்க

Ctrl+y இறுதியாக மேற்கொண்ட செயலை மீண்டும் மேற்கொள்ள

Ctrl+z இறுதியாக மேற்கொண்டதனை நீக்க
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல