செவ்வாய், 8 அக்டோபர், 2013

70 வருடங்களுக்கு பின் இணைந்த காதல் ஜோடி (படங்கள் இணைப்பு)

1945 ஆம் ஆண்டு பிரிந்த காதல் ஜோடி­யொன்று 70 வரு­டங்கள் கழித்து மீளவும் இணைந்து கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னியா மாநி­லத்தில் இடம்பெற்­றுள்­ளது.

1945 ஆம் ஆண்டில் 17 வய­தான சக் ரெட் லெவிஸும் 16 வய­தான சான்டி பிரான்சி றிக்­கின்ஸும் கலி­போர்­னிய கடற்­க­ரையில் சந்தித்து முதல் பார்­வை­யி­லேயே காதல் கொண்­டனர்.

இந்­நி­லையில் சான்­டியின் குடும்பம் லொஸ் ஏஞ்­செல்­ஸுக்கு சென்­ற­தை­ய­டுத்து அவர்­க­ளி­டை­யே­யான காதல் தொடர்பு முறி­வ­டைந்­தது.

தொடர்ந்து அவர்கள் இரு­வரும் வெவ்வேறு வாழ்க்கைத் துணை­க­ளுடன் திரு­மண வாழ்வில் இணைந்­தனர்.

இந்­நி­லையில், தமது வாழ்க்கைத் துணை­களை இழந்து தனி­மையில் வாழ்ந்த லெவிஸும் (85 வயது), சான்­டியும் (84 வயது) 7 வரு­டங்­க­ளுக்கு முன் இலத்­தி­ர­னியல் அஞ்சல் மூலம் ஒரு­வ­ரை­யொருவர் தொடர்பு கொண்­டனர்.

இதனையடுத்து, அவர்­க­ளி­டை­யே­யான காதல் தொடர்பு மீண்டும் துளிர்விட்டு அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல