செவ்வாய், 8 அக்டோபர், 2013

அர்ச்சகர்களாக விதவைப் பெண்கள்


கர்­நா­டக மாநிலம் குத்­ரோலி கோகர்­நா­தேஸ்­வரா கோயிலில், இரண்டு விதவை பெண்கள், அர்ச்­ச­கர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டு ள்­ளனர்.

'பர­சு­ராமர் தேசம்' எனப் போற்­றப்­படும் மங்­க­ளூரு மாவட்டம் குத்­ரோலி கோகர்­நா­தேஸ்­வரா கோயிலில், தசரா விழாவை முன்­னிட்டு கண­வனை இழந்த பெண்­க­ளான இந்­திரா சாந்தி, லட்­சுமி சாந்தி ஆகிய இருவர் அர்ச்­ச­கர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டனர்.

முன்­ன­தாக இவர்­க­ளுக்கு, கடந்த நான்கு மாதங்­க­ளாக, பூஜை செய்யும் முறைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்­கப்­பட்­டன.

இது­கு­றித்து முன்னாள் மத்­திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரி கூறு­கையில், ``பெண்­களை பூமாதேவி­யாக மதிக்கும் நம் நாட்டில், அவர்கள் கண­வனை இழந்து விட்டால் எந்த நல்ல காரி­யத்­திலும் பங்கு கொள்ள அழைக்­காமல் புறக்­க­ணிப்­பது மூட நம்­பிக்­கையின் அடை­யா ளம். இந்த வழக்கம் நாட்­டி­லி­ருந்து ஒழிய வேண்டும்” என் றார்.

இந்த நியமனத்தை, கர்நாடகா விலுள்ள பல பெண்கள் அமைப் பினர் வரவேற்றுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல