The Flour Power project was created by MBA students (from left to right) Jesse Pearlstein, Shobhita Soor, Zev Thompson, Gabriel Mott and Mohammed Ashour who call themselves the Aspire Food Group. The 2013 Hultz Prize was awarded to the team by former President Bill Clinton (second from left)
உலகில் பட்டினியாலும் போஷாக்கின்மையாலும் வாடும் மில்லியகணக்கானோருக்கு உணவாக அளிக்கக்கூடிய பூச்சிகளால் தயாரிக்கப்பட்ட மாவை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
‘சக்தி மா’ என அழைக்கப்படும் இந்த மாவானது புரதச்சத்து மிக்கதாகும்.
இந்த மாவை விருத்தி செய்தமைக்காக கனடாவின் மொன்றியலிலுள்ள மக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக இந்தக் குழுவினர் பூச்சிகளிலிருந்து மாவைத் தயாரிக்கும் செயற்கிரமத்தில் மெக்ஸிக்கோவிலுள்ள விவசாயிகளை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
மெக்ஸிக்கோவில் சுமார் 4 மில்லியன் பேர் வறுமையாலும் போஷாக்கின்மையாலும் வாடி வருகின்றனர்.
முதல் தொகுதி சக்தி மா வெட்டுக்கிளிகளிலிருந்து தயாரிக்கப்படவுள்ளது.
அதன் பின் உள்ளூர்வாசிகளின் சுவை நாட்டத்துக்கு ஏற்ப வேறுபட்ட பூச்சி வகைகளை பயன்படுத்தி சக்தி மாவை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ‘சக்தி மா’ உற்பத்தியானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக