புதன், 20 நவம்பர், 2013

தாயொருவருக்கு ஒரே சமயத்தில் பிறந்த 7 பிள்ளைகளின் 16 ஆவது பிறந்த நாள் (படங்கள் இணைப்பு)

தாயொருவருக்கு உலகில் ஒரே சமயத்தில் கருத்தரித்து பிறந்து உயிர் வாழும் முதலாவது 7 சகோதரர்கள்.
 
தாயொருவருக்கு ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்து அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த 7 சகோதரர்கள் செவ்வாய்க்கிழமை தமது 16 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினர்.

இவர்கள் ஒரே தாய்க்கு ஒரே சமயத்தில் பிறந்து உயிர்தப்பிய உலகின் முதலாவது 7 சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்னி, கெல்ஸி, நடாலி, பிரான்டன், அலெக்ஸிஸ் நாதன், ஜோல் மக்கோஹி ஆகிய இந்த 7 சகோதரர்களும் அமெரிக்க அயோவா மாநிலத்தில் கார்லிஸல் எனும் இடத்திலுள்ள தமது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினர்.

அவர்களின் தாயாரான பொபி இனவிருத்தி மருந்துகளை உள்ளெடுத்ததையடுத்து ஒரே சமயத்தில் 7 குழந்தைகளை கருத்தரித்தார்.

அவர் இவ்வாறு ஏழு குழந்தைகளை கருத்தரிப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவர் உலகளாவிய ரீதியில் பிரபலம் பெற்றார்.

1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி டெஸ் மொயிெனஸ் எனும் இடத்திலுள்ள மருத்துவமனையில் பொபி 7 குழந்தைகளை பிரசவத்திற்கு 9 வாரங்களுக்கு முன் பிரசவித்த போது, அந்தக் குழந்தைகள் ஒரு சில நாட்களில் இறந்து விடும் என மருத்துவர்களால் எதிர்வுகூறப்பட்டது.

அச்சமயம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டன் பொபிக்கும் அவரது கணவருக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த 4 ஆண்கள் மற்றும் 3 பெண் களை உள்ளடக்கிய இந்த அபூர்வ குழந்தை களுக்கு உதவும் முகமாக பொபிக்கும் அவரது கணவருக்கும் வீடு, வேன், ஒரு வருட காலத்துக்கு போதுமான வெண்ணெய், இரு வருடங்களுக்குப் போதுமான உள்ளாடைகள், அயோவா பல்கலைக்கழகத்தின் முழுமை யான புலமைப்பரிசில்கள் என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டன.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல