கனடா வன்கூவர் பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக வீடொன்றின் படுக்கை அறையில் பல் சத்திரசிகிச்சை பயிற்சி நிலையம் நடத்திவந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி நபர், தற்போது பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில் இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது,
தங் ஸாங் வு என்ற குறித்த நபருக்கு அனுமதி இல்லாமல் பல் மருத்துவ பயிற்சியில் ஈடுபடுவதை நிறுத்தும்படி விடுக்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறிய குற்றத்திற்காக ஏற்கனவே இவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இவ்விடயம் குறித்து பிரிட்டிஷ் கொலம்பிய பல்மருத்துவ கல்லூரி சத்திர சிகிச்சையாளர்களால் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தங் ஸாங் வு, ஸ்காபுரோ தற்போது பொலிஸில் சரணடைந்துள்ளார் எனவும் திங்கட்கிழமை இவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் கல்லூரி கடந்த மே மாதத்தில் பெர்னபி என்ற நகரில் இவர் நடத்திய சட்டவிரோத பல் சத்திர சிகிச்கை நடவடிக்கை குறித்து வெளிப்படுத்தியிருந்தது. அதனையடுத்து இவர் நடத்திய பல் சத்திரசிகிச்சை நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றம் நூற்றுக்கணக்கான நோயாளிகளை கல்லீரல் வீக்கம், எச்.ஐ.வி போன்ற நோய்களுக்கான சோதனைகளை செய்ய எச்சரித்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, அனுமதிப் பத்திரம் இன்றி பயிற்சியில் ஈடுபடுவதை நிறுத்தும் படி இவருக்கு 2003 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டிந்த நிலையில், அதனை மீறியதால் இவருக்கு கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிபதி சிறைத்தண்டனை விதித்ததுடன் கல்லூரியின் சட்டப்படியான நஷ்டஈட்டையும் செலுத்தும்படி கட்டளை பிறப்பித்துள்ளது. இத்தொகை 140,000 டொலர்களுக்கும் அதிகமாகும் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக