வெள்ளி, 1 நவம்பர், 2013

தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கும் உணவு பொருட்கள்!!!

எங்கு பார்த்தாலும், விவாகரத்து, குடும்ப சண்டை மற்றும் கணவன்-மனைவிக்கு இடையே மோதல்கள் என நாளிதழ்களிலும், கண்முன்னும் பார்க்கும் 21-ம் நூற்றாண்டில், இன்னமும் சமுதாயம் அமைப்பு உடையாமல் பாதுகாக்கும் அம்சமாக குடும்பம் உள்ளது. சமூக அமைப்பு உடையாமல் இருப்பதற்கு கணவன் மனைவியிடம் இருக்கும் அன்யோன்யமான உறவும் காரணமாக உள்ளது. அன்யோன்யமான உறவிற்கு மனப்பூர்வமான உறவு மட்டுமல்லாமல், உடல் பூர்வமான தாம்பத்ய உறவும் இன்றியமையாது உள்ளது. சில சச்சரவுகளை பெரிது படுத்தப்படாமல், பள்ளியறைகளிலேயே பேசி முடிக்கப்படுவதும், ஆண் பெண் இடையே உள்ள இனக்கவர்ச்சியாலும் உறவு வலுப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இந்த வகையில் கணவன் மனைவி இடையேயான தாம்பத்ய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொருட்டு ஆரோக்கியமான உணவுகளை புதிது புதிதாக, பல்வேறு நபர்களின் ஆலோசனைகளுடன் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் டார்க் சாக்லெட் மற்றும் பாதாம், பாலுணர்வை மிகவும் தூண்டும் உணவுகள் என தெரிந்து வைத்திருக்கும் அதே வேளையில், வேறு சில உணவுகள் பாலுணர்வுக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தாம்பத்ய வாழ்க்கைக்கான ஆவலையும் மற்றும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பையும் குறைக்கும் தன்மை கொண்ட இந்த உணவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.

  • செயற்கை இனிப்புகளில் உள்ள ஆஸ்பர்டேம் (aspartame) என்ற பொருள், உடலில் உள்ள செரோடோனின் என்ற ஹார்மோனை பாதிக்கும். அதன் காரணமாக மனநிலை மற்றும் உணர்ச்சிப் பெருக்கு பாதிக்கப்படும். இது மட்டுமல்லாமல், தலைவலி, எரிச்சல், மனக்கவலை தொடர்பான சீர்கேடுகள் மற்றும் தூக்கமின்மை போன்ற பாதிப்புகளும் ஆஸ்பர்டேமினால் ஏற்படும். எனவே, கடைகளுக்குச் செல்லும் போது தேன் போன்ற இயற்கையான இனிப்புகளை வாங்கி, ஆரோக்கியம் மற்றும் தாம்பத்தியத்தை பாதுகாக்கவும்.

  • சோளக்கருதுகளில் பாலுணர்வுக்கு எதிரான பொருட்கள் உள்ளன என்பது பல பேருக்கு ஆச்சரியமூட்டும் விஷயமாக இருந்தாலும் அதுதான் உண்மை. மனிதர்களிடையே உள்ள பாலுணர்வினை கட்டுப்படுத்தும் பொருட்டாக. இந்த தானியத்தை உணவுப் பொருட்களில் சேர்த்தனர் என்ற விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே, காதல் நிரம்பிய காலை உணவு அல்லது வேகமான நொறுக்குத் தீனி என இதனை சேர்த்துக் கொண்டாலும், இதை தவிர்த்து விடவும்.

  • அதிக கொழுப்புச் சத்து நிரம்பிய பால் பொருட்களான வெண்ணைய், உடலை பெருமளவு பாதிக்கக் கூடியதாகும். இந்த பொருட்களை அதிகளவு சேர்த்துக் கொள்வதால் உருவாகும் நச்சுப் பொருட்கள், பாலுணர்வை தூண்டக்கூடிய ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (oestrogen), புரோஜெஸ்ட்டிரோன் (progesterone) மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) ஆகயவற்றின் உற்பததியை பாதிக்கும்.

  • உடலையும், பாலுணர்வையும் ஒரே சமயத்தில் சேதப்படுத்த, கட்டிலுக்கருகே வைத்திருக்கும் சிப்ஸ் ஒன்றே போதும் என்ற உண்மையை உணரும் போது அதிர்ச்சி அடைய வேண்டாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் மொறுமொறுப்பான நொறுக்குத் தீனிகளில் கொழுப்பு நிரம்பிய ஊசிப்போன எண்ணைய் மற்றும் மிகவும் அதிகமான சூட்டில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த மோசமான கொழுப்புகளின் கூட்டு மற்றும் அதிகமான வெப்பம், பாலுணர்வுக்கு ஒன்றாக வேட்டு வைக்கும்.

  • காலையில் காபி சாப்பிடுவது புத்துணர்ச்சியூட்டும் என்றாலும், அதனை குடிப்பதன் காரணமாக கார்டிசோல் என்ற மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோனை உற்பத்தி செய்து விடும். அதிக காபி குடிப்பதால் உடலுக்குள் செல்லும் அதிகபட்ச காப்ஃபைன் காரணமாக மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.

  • சோயா ஆரோக்கியமான மற்றும் இறைச்சிக்கு மாற்றான உணவாகும். ஆனால் சோயாவில் இருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் (phytoestrogens) ஆணின் பாலுணர்வு ஹார்மோன்களை மிஞ்சும் திறன் வாய்ந்தது. மேலும் இது ஆணின் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன், மார்பக வளர்ச்சி மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றை செய்யும் திறன் படைத்தது.

  • தொடர்ச்சியாக சோடா அல்லது காற்று ஏற்றப்பட்ட பானங்களை குடிப்பது, உடல் எடை மற்றும் மனநிலையில் மாற்றங்களை கொண்டு வந்துவிடும். இந்த வகையான பானங்கள் உடல் பருமன் அதிகரிப்பு, பல் சொத்தை, நீரிழிவு மற்றும் பல பிரச்சனைகளை உருவாக்கும். அதனால் பாலுணர்ச்சி பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை!

  • இன்னொரு புதினா சூயிங் கம்மை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் முன் இதைப் படிக்கவும்! செரிமானப் பிரச்சனைகளை மற்றும் வாய் துர்நாற்றத்தை தீர்த்து வைக்கும் அதே வேளையில், புதினா இலைகள் பாலுணர்ச்சி பெருக்கிலும் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. புதினாவில் உற்பத்தியாகும் மென்த்தால் (menthol) நம்முடைய பாலுணர்வை பாதிக்கும். எனவே, வாய் துர்நாற்றத்தை அகற்ற இயற்கையான வேறு சில மூலிகைகள் மற்றும் நன்றாக பல் துலக்குதல் ஆகியவற்றை செய்யுங்கள்.

  • ஒவ்வொரு முறை ஆல்கஹால் குடிக்கும் போதும் ரிலக்ஸாக உணர்வீர்கள். ஆனால் ஆல்கஹால் குடித்த பின்னர், தூங்கி வழிபவராகவும் மற்றும் சுற்றுப்புறத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வும் இல்லாமல் இருப்பீர்கள். குடித்து விழுந்து கிடப்பவரின் மீது யாருக்காவது காதல் வருமா? ஏனெனில், ஆல்கஹால் குடிப்பதன் காரணமாக பாலுணர்வைத் தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே, அடுத்த முறை துணைவியுடன் மகிழ்ந்திருக்க விரும்பினால், ஆல்கஹலுக்கு சொல்லுங்க நோ!!

  • ப்ரெஞ்சு ப்ரை மற்றும் பர்கர் போன்ற வறுத்த உணவுகள் காதலுணர்விற்கு பகைவர்கள். ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்புகள் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்து விடும். எனவே, துணைவியை மாலை உணவிற்கு வெளியே அழைத்துச் சென்று, அவருடைய காதல் உணர்வைத் தூண்ட விரும்பினால், பாஸ்ட் புட் உணவகங்களிலிருந்து விலகியே இருங்கள்.
Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல