தற்போது அமெரிக்காவுக்கு தலைவலியாக அல்-காய்தா நடமாட்டம், சிரியா, எகிப்து, மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் இருக்க, எதிர்பாராத நாடுகளில் வைத்து அல்-காய்தா தமது கைவரிசையை காட்டலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ‘எதிர்பாராத நாடுகள்’ என இரு நாடுகள் உளவு வட்டாரங்களில் குறிப்பிடப் படுகின்றன.
முன்பே திட்டமிடப்பட்டு, இச்த இரு நாடுகளிலும் அல்-காய்தா, தமது சிலீப்பர் செல்களை கொண்டுபோய் இறக்கி விட்டதாக சி.ஐ.ஏ. நம்புகிறது என்கிறார்கள். அங்கு சாதாரண ஆட்கள் போல தங்கியுள்ள இந்த சிலீப்பர்-செல்கள், தலைமையின் உத்தரவு கிடைத்ததும், அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தலாம்.
அப்படியொரு தாக்குதலுக்கான சந்தர்ப்பம் சீக்கிரம் வந்தாலும் வரலாம் என்ற சந்தேகம் உள்ளதாம்.
இந்த சிலீப்பர் செல் நபர்கள், சில மாதங்களுக்கு முன்னரே, அனுப்பப்பட்டவர்கள் என்றும், அப்போதே இந்த விவகாரத்தை ஓரளவுக்கு ட்ராக் பண்ணிய சி.ஐ.ஏ.வும், பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6ம், அப்போது இந்த விவகாரத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டனர் என உளவு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அவர்கள் அப்போது சீரியசாக எடுத்துக் கொள்ளாத விஷயம், இப்போது, சிலீப்பர் செல்களாக மாறியுள்ளதாம்!
அமெரிக்க, பிரிட்டிஸ் உளவுத்துறைகள் ஏற்கனவே ஓரளவுக்கு ட்ராக் பண்ணிய விவகாரம் இது என்று கூறினோமே.. அது, சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, ஈராக்கில் இருந்து சிறு சிறு குழுக்களாக அல்-காய்தா ஆட்கள் வெளியேறுகிறார்கள் என்ற தகவல் முதலில் பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு கிடைத்தது.
தங்களுக்குக் கிடைத்த தகவலை அவர்கள், சி.ஐ.ஏ.வுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
ஆனால், இந்தக் கதை சி.ஐ.ஏ.வுக்கு போய் சேர்வதற்கு முன், அதற்குள் மூன்று நான்கு குழுக்கள் ஈராக்கைவிட்டு வெளியேறிவிட்டன.
உடனே எல்லைப்பகுதிகளின் கெடுபிடி அதிகரிக்கப்பட்டது. ஈராக்கிய பாதுகாப்பு படையினருக்கு அமெரிக்க தரப்பில் இருந்து பிரஷர் கொடுக்கப்பட, அவர்களும் எல்லைகளில் கடும் சோதனைகளில் ஈடுபட்டார்கள். சிலரைக் கைதும் செய்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் ஈராக்கில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, ஈராக்கிய விசாரணை அதிகாரிகளுடன் சி.ஐ.ஏ. ஆட்களும் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த விசாரணைகளின்போது, அவர்களில் ஓரிருவர் அல்-காய்தாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால் ஈராக்கில் இருந்து வெளியேறி எங்கே செல்ல திட்டமிட்டு இருந்தனர் என்ற விபரம் தெரியவரவில்லை. அதாவது, எங்கே போகிறோம் என்று தெரியாமல், மேலிட உத்தரவுப்படி வெளியேற ட்ரை பண்ணியிருக்கிறார்கள்.
இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த உத்தரவில், “ஈராக்கிலிருந்து வெளியேறி, வெளிநாடு ஒன்றில் சிறிதுகாலம் தங்கியிருந்து தலைமறைவாக இயங்க வேண்டியிருக்கும்” என்று மட்டும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் போகப்போகும் நாடு எந்த நாடு என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கவில்லை.
அவர்களை எவ்வளவுதான் சித்திரவதை செய்து விசாரித்தாலும், எங்கே போகின்றோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை.
ஆனால், வேறு ஒரு விபரத்தை அவர்களிடமிருந்து அறிந்து கொண்டது சி.ஐ.ஏ.
இவர்கள் ஈராக்கில் இருந்து கிளம்பி, முதலில் ஏதாவது ஒரு இடத்துக்குப் போகவேண்டுமல்லவா – கிட்டத்தட்ட ட்ரான்சிட் பாயின்ட் போல – அந்த இடம் எதுவென்ற விபரம் கிடைத்தது.
அந்த இடம், கத்தார்.
ஈராக்கிலிருந்து சிறு சிறு குழுக்களாக கிளம்பும் ஆட்கள், கத்தார் சென்று அங்குள்ள சிறு ஹோட்டல்களில் தங்கியிருக்கும்படி மாத்திரம் கூறியிருக்கிறார்கள். கத்தாரில் வேறு சிலர் இவர்களைத் தொடர்புகொண்டு, செல்லவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதே திட்டம்.
விசாரணையின் போது இந்த விபரம் தெரியவந்தவுடன் சி.ஐ.ஏ., கத்தாரில் உள்ள தங்களது ஆட்களை உஷார்ப்படுத்தியது. மேலதிகமாக சி.ஐ.ஏ. ஏஜன்ட்களும் கத்தார்வரை அனுப்பிவைக்கப்பட்டார்கள்.
இவர்கள் கைது செய்த குழுவுக்கு முன்னரும் சில குழுக்கள் ஈராக்கைவிட்டு வெளியேறியிருந்தன அல்லவா. அவர்கள் கத்தாரில் தங்கியிருக்கிறார்களா என்று சி.ஐ.ஏ. நோட்டம் விட்டது. கத்தாரிலுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் கத்தார் பொலீசாரின் உதவியுடன் தேடப்பட்டன.
அப்போது, ஈராக்கில் இருந்து சிறு சிறு குழுக்களாக ஆட்கள் வந்து தங்கியிருந்தது உறுதியாகி இருந்தது. ஆனால் வந்த அனைவருமே அறைகளைக் காலிசெய்துவிட்டு சென்றுவிட்டிருந்தார்கள்.
இது இரண்டு விதமான சாத்தியங்களை யோசிக்க வைத்தது.
முதலாவது, சிறு சிறு குழுக்களாக வந்து கத்தாரில் உள்ள சிறு ஹோட்டல்களில் தங்கியிருந்தார்கள் என்று மாத்திரம் சொல்லப்பட்டு அனுப்பப்பட்டவர்கள் என்பதால், அவர்களை ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி கத்தாரிலேயே வேறு ஒரு இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கலாம்.
இரண்டாவது, அவர்கள் போய்ச் சேரவேண்டிய நாட்டுக்கு சிறு சிறு குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். அதாவது கத்தாரை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கலாம்.
சி.ஐ.ஏ., கத்தார் உளவுத்துறையின் உதவியுடன் கத்தாருக்குள் தேடி பார்த்ததில், இவர்கள் தேடும் நபர்கள் கத்தாருக்கு உள்ளே இல்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னர் நாட்டுக்கு வெளியே போகும் பாதைகளை ஆராயத் தொடங்கினார்கள். எல்லைகளை விட்டு யார்யார் வெளியேறினார்கள் என்ற விபரங்களை சேகரித்தார்கள். அவற்றை வைத்து ஆராய்ந்தார்கள்.
அப்போது கிடைத்தது, மற்றொரு தகவல் – கத்தாரில் இருந்து கிளம்பிய ஈராக்கியர்கள், வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள கொண்டூஸ் நகருக்குச் சென்றார்கள் விபரம் தெரியவந்தது.
அதன் பின்னர் அவர்கள் என்னவானார்கள் என்று ட்ரேஸ் பண்ண முடியாமல் இருந்தது.
இன்றைய நிலையில் அல்-காய்தாவின் நடவடிக்கைகள் ஆப்கானில் இருப்பதைவிட ஈராக்கில் இருப்பதுதான் அதிகம். அப்படியான சூழ்நிலையில் இவர்களை ஏன் ஈராக்கில் இருந்து வெளியேற்றி ஆப்கானுக்குள் கொண்டு போகிறார்கள் என்பது சி.ஐ.ஏ.வை குழப்பியடித்தது.
ஆப்கானில் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா? அல்லது போய்ச்சேரவேண்டிய இடம் ஆப்கான் இல்லாமல் வேறு ஏதாவது இடமா?
இந்தக் குழப்பத்தில் சிறிதுகாலம் ஓடிவிட்ட நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள், இந்த பிக்சரை கொஞ்சம் கிளியர் ஆக்குகின்றன. இப்போது உளவு வட்டாரங்களிலிருந்து தெரியவரும் தகவல்களை வைத்துப் பார்த்தால் இவர்கள் செய்யத் திட்டமிட்டிருக்கும் காரியத்தை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதோ கிடைத்த தகவல்களைத் தொகுத்துத் தருகிறோம். படித்துப் பாருங்கள்.
இந்தமாத ஆரம்பத்தில் அல்-காய்தாவின ஆட்கள் எதிர்பாராத இடம் ஒன்றில் தோன்றியிருக்கிறார்கள். ஆச்சரியகரமான அந்த இடம் – சீனா.
சீனாவின் ஷிங்ஜியாங் உய்குர் மாகாணத்திலுள்ள எல்லை நகரமான குஷி (Kushi) நகரத்துக்குள் அல்-காய்தாவின் ஆட்கள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆயுதம் தரித்த வேறு ஒரு லோக்கல் குழு இவர்களை மறைவிடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இந்த விபரம் சீன உளவுத்துறைக்குத் தெரியவந்தபோது அவர்கள் அதீத குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
உள்ளே வந்திருப்பது அல்-காய்தாவின் ஆட்கள் என்பதை சீன உளவுத்துறை உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால் ஏன் சீனாவுக்குள் வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. சீனாவுக்கும் அல்-காய்தாவுக்கும் நட்பும் இல்லை. பகையும் இல்லை.
ஒரு வேளை சிறிது காலம் தலைமறைவாக மறைந்திருக்க வந்திருக்கலாம் என்ற ரீதியில் சீன உளவுத்துறை யோசித்ததாம்.
இதே நேரத்தில் வேறு ஒரு விபரம் தெரியவந்திருக்கின்றது.
இவர்கள் குஷி நகருக்குள் நுழைந்தபோது ஆயுதம் தரித்த குழுவொன்று இவர்களை துரிதமாக அழைத்து கொண்டு சென்று மறைந்து விட்டது என்று எழுதினோமல்லவா? அவர்கள் யாரென்ற விஷயம் தெரியவந்திருந்தது.
அவர்கள் யாரென்றால், உய்குர் முஸ்லீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆட்கள். இவர்களுக்கு சீனாவின் சில பகுதிகளில் செல்வாக்கு உண்டு. சீனாவுக்கு உள்ளே இவர்களது நடவடிக்கைகள் எதுவும் கடந்த காலங்களில் இருந்ததில்லை என்பதால் சீன போலீஸ் அவர்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
இப்படி சீனாவில் திடீரென முளைத்த அல்-காய்தாவின் குழு, எப்படி எங்கேயிருந்து வந்திருக்கலாம் என்ற உளவு வட்டாரங்களில் துருவிப் பார்த்தால், ஈராக்கில் இருந்து சிறு சிறு குழுக்களாக வெளியேறி கத்தார் வந்து, அங்கிருந்து ஆப்கானின் வடபகுதிக்குள் நுழைந்த ஆட்களில் ஒரு பகுதிதான் இவர்கள் என்று தெரிய வருகின்றது.
எனவே அவர்களது இறுதித் தரிப்பிடம் ஆப்கான் அல்ல – வேறு ஒரு நாடு என்பது உறுதியாகியிருக்கிறது.
வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர்தான் இவர்கள் என்றால் மிகுதி ஆட்கள் எங்கே? அங்கேதான் உள்ளது, இந்த விவகாரத்தின் மர்ம முடிச்சு!
உளவு வட்டாரங்களில் அதற்கும் விடையுண்டு.
ஆப்கானின் வடக்கு நகரமான கொண்டூஸ் சென்ற இந்தக் குழுவினருக்கு அங்குள்ள ரகசிய முகாம் ஒன்றில் வைத்து விசேட பயிற்சிகள் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில வகை வெடிகுண்டுகளைக் கையாளும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டதாக தகவல் உண்டு. பின்னர் அங்கிருந்து ஆப்கான் எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
எல்லையின் மறுபக்கத்தில் இவர்களுக்காக் காத்திருந்தவர்கள் உஸ்பெகிஸ்தானில் உள்ள அல்-காய்தாவின் கிளை அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள். (இந்தக் கிளை அமைப்பின் பெயர் MUI)
நாம் இதுவரை வெளியிட்ட ராணுவ புலனாய்வு கட்டுரைகளுக்கு வாசகர்கள் அதன் கீழுள்ள லிங்கில் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள். விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும். தமிழில் அதிகம் வெளியாகாத இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து தர முடியும். இந்தக் கட்டுரைக்கும் வாசகர்கள் ஆதரவு இருந்தால், தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடலாம்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள அல்-காய்தாவின் கிளை அமைப்பு MUIக்கு உஸ்பெகிஸ்தானில் மாத்திரமல்லாமல், மஜிகிஸ்தானிலும் இயங்குதளம் உண்டு. அத்துடன் பெரிய பயற்சி முகாமொன்று பேர்கானா பள்ளத்தாக்குப் பகுதியில் உண்டு என்றும் கூறப்படுகின்றது.
கிளை அமைப்பின் தலைவராகச் செயற்படுபவர் தாகீர் யுல்டாவெஷவ். இவர் பின்லேடனுடன் ஒரு காலத்தில் ஆப்கானில் தங்கியிருந்தவர். அதன் பிறகு இவரைப்பற்றிய எந்தவித தகவலும் இல்லை. திடீரென தாஷ்கன்ட்டில் 2004-ம் ஆண்டு எக்கச்சக்க பணத்துடன் தோன்றினார்.
அந்தப் பணத்தை வைத்து கிட்டத்தட்ட ஒரு மினி ராணுவம் போன்ற அமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டார். இந்த மினி ராணுவத்துக்காக ஆயுத கறுப்புச் சந்தையில் பலதரப்பட்ட ஆயுதங்கள் வாங்கப்பட்டன.
இப்போது அவர் ஆப்கானிலிருந்து உஸ்பெகிஸ்தானுக்கு அல்-காய்தாவின் ஆட்களை அழைத்து சென்றதிலிருந்து இவருக்கும் பின்லேடனுக்கு பின்னர் உள்ள அல்-காய்தா தலைமைக்கும் இன்னமும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. அல்-காய்தா அனுப்பிவைக்கும் ஆட்களை வரவேற்று, பாதுகாப்பு கொடுத்து, வெவ்வேறு இடங்களுக்கு (அல்லது நாடுகளுக்கு) போக்குவரத்து வசதிகள் செய்து கொடுப்பதற்காகவே இவரது மினி ராணுவம் அமைக்கப்பட்டது என்றும் ஊகிக்கப்படுகிறது.
(இவர் உஸ்பெக்கின் ஜனாதிபதி கரிமோவ்வை ராணுவம் புரட்சி ஒன்றன் மூலம் அகற்றுவதற்குத்தான மினி ராணுவம் ஒன்றை அழைத்திருக்கிறார் என்ற கதைதான் இவ்வளவுகாலமும் இருந்து வந்தது. இப்போது கதை மாறுகிறது)
தாகீர் யுல்டாவெஷவ் அழைத்துச் சென்ற அல்-காய்தாக ஆட்கள் அதன் பின்னர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு வேறுவேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனராம். அதில் பெரிய பிரிவு அங்கிருந்து ஓஷ் சென்று, பின்னர் சீன எல்லைகளுக்குள் கடத்திச் செல்லப்பட்டு குஷி வரை சென்று சேர்ந்தனராம்.
இரண்டாவது பிரிவில் அதிக ஆட்கள் இல்லை. அவர்கள் ஜலால்-அபாட்டில் ஒன்று சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் எல்லையைக் கடந்து உஸ்பெகிஸ்தானுக்கு நுழைந்து அனடிஜோன் என்ற பேர்கானா பள்ளத்தாக்கு நகரில் முகாம் அமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.யும் பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6ம் இந்த குழு வட ஆப்கான் நகரில் இருந்து வெளியேறும்போதே விஷயத்தை தெரிந்து கொண்டு விட்டனர் என்று கூறப்படுகிறது. கொண்டூசில் இருந்து அவர்கள் கிளம்பியவுடனேயே சி.ஐ.ஏ.வுக்கு தகவல் கிடைத்துவிட்டது என்று கூறப்படுகிறது.
சி.ஐ.ஏ., இந்தக் குழுவின் நடமாட்டத்தைத் தடுக்கவேண்டுமென்றால், அதை கொண்டூஸ் நகரில் இருந்து ஆப்கான் எல்லைக்குப் போகும் பாதையில்தான் தடுத்திருக்க முடியும். எல்லையைத் தாண்டிவிட்டால் கடினமாகப் போய்விடும். வேறு நாடுகளுக்குள் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும்.
அனால், ஆச்சரியகரமாக சி.ஐ.ஏ., இந்தக் குழுவின் நகர்வை ஆப்கான் எல்லைகளுக்குள் வைத்துத் தடுக்கவில்லை. ஏதோ காரணத்துக்காக, எல்லையைத் தாண்டி வெளியே போவதை கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.
என்ன காரணம்?
உறுதியான தகவல்கள் இல்லை. ஊகிக்கப்படுவது என்னவென்றால், அல்-காய்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்தக் குழுவின் நகர்வு எந்தத் திசையில் இருக்கப் போகின்றது என்பதில் வைத்து ஊகிக்கலாம் என்பதால், இவர்கள் எதுவரை போகிறார்கள் என்று விட்டுப் பார்த்திருக்கலாம்.
அப்படியென்றால்,
ஈராக்கில் இருந்து கிளம்பிய குழுவில் ஒரு பகுதி சீனாவிலும் மற்றொரு பகுதி உஸ்பெகிஸ்தானிலும் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இதை சி.ஐ.ஏ. நோட் பண்ணிக் கொண்டிருக்கும். அல்-காய்தாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஏதாவது இந்த இரு நாடுகளி இருந்து தொடங்கும் என்பதை சி.ஐ.ஏ. தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும்.
இவர்களது இருப்பிட நகரங்களைத் தெரிந்துகொண்ட சி.ஐ.ஏ. அமெரிக்க வெளிவிவகார அமைச்சினூடாக ரஷ்யாவிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தாகக் கூறப்படுகின்றது. அதை எதற்காக ரஷ்யர்களிடம் தெரிவித்தார்கள் என்பதை இலகுவாக ஊகிக்கலாம்.
ரஷ்யாவின் மோட்ரைஸ்ட் ரைபிள் படைப் பிரிவொன்று (டிவிஷன் 201) உஸ்பெகிஸ்தானில் இருக்கின்றது. அந்தப் படைப்பிரிவை வைத்து உஸ்பெக்கில் இருக்கும் அல்-காய்தா ஆட்களை தாக்க முடியுமா என்று அமெரிக்கா பார்த்திருக்கலாம்.
ஆனால், ரஷ்யா உஸ்பெக்கிலுள்ள தனது படைப் பிரிவைப் பயன்படுத்தித் தாக்குதலை நடத்த முடியாது என்று அமெரிக்காவுக்கு கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. மாறாக, வேறு ஒரு ஆச்சரியகரமான காரியமொன்றை பரிந்துரை செய்திருக்கிறதாம்.
ரஷ்யா கூறியதன்படி, ஒரு வேளை சீன ராணுவம் இந்தக் காரியத்தைச் செய்ய விரும்பினால் – அதாவது அல்-காய்தா குழுவின் முகாமை உஸ்பெக்கில் தாக்க விரும்பினால் – அதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவிக்காது.
உளவு வட்டாரங்களில் கூறப்படும் இந்தத் தகவல் மாத்திரம் நிஜமாக இருந்தால் இது ஒரு மகா ஆச்சரியமான நிகழ்வு. முதல் முறையாக ரஷ்ய அரசு, சீன ராணுவத்தை மத்திய ஆசியப் பிராந்தியத்துக்குள் வர அனுமதிக்கின்றது.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா? ரஷ்யா கிட்டத்தட்ட பொறுப்பை கைமாற்றப் போகின்றது!
அல்-காய்தாவின் நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட விரும்பாமல் – அதுவும் நடவடிக்கைகள் உஸ்பெக்கில் இருக்கும்போது ஏன் தலையிடவேண்டும் என்ற நினைப்பில் – பொறுப்பை அமெரிக்காவின் தலையிலும், சீனாவின் தலையிலும் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்க நினைக்கிறது ரஷ்யா.
அதுவும் ஓரளவுக்கு எதிர்பார்க்கக்கூடியது-அல்லது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே. பொருளாதார நிலைமை கொஞ்சம் அப்படியிப்படியாக இருக்கும் நிலையில் ரஷ்யா தேவையில்லாமல் அல்-காய்தாவின் விரோதத்தை ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற ட்ரக்கில் யோசித்திருக்கலாம்.
உஸ்பெக்கில் நுழைந்த அல்-காய்தா ஆட்களின் நிலைமை அப்படியிருக்க, சீனாவுக்குள் நுளைந்த ஆட்களின் நிலைமை என்ன?
அல்-காய்தா போன்ற அமைப்பு ஒன்றின் ஊடுருவலுக்கு சீனா முற்றிலும் தயாரான நிலையில் இல்லை என்றே கூறப்படுகின்றது. என்ன விதமான நடவடிக்கையை எடுப்பது என்பதில் அவர்களிடம் பெரிய குழப்பம் நிலவுதாகக் கூறப்படுகின்றது.
இப்படியானதொரு சந்தர்ப்பத்தை அல்லது, அல்-காய்தா போன்ற அமைப்பு ஒன்றை சமாளிக்கவேண்டிய தேவை சீனாவுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை.
அதே நேரத்தில் இப்படியான விவகாரங்களில் பழம் தின்று கொட்டையும் போட்ட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ;உதவியையும் நாடுவதை சீனா விரும்பாது. என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
அல்-காய்தா தனது ஆட்களை சீனாவுக்குள் கொண்டுபோய் இறக்கியிருப்பதன் காரணம் என்னவாக இருக்கலாம்?
பிய்ஜிங், ஷாங்காய், குவாங்பூ ஆகிய சீன நகரங்களில் அமெரிக்கத் தூதரகங்கள் இருக்கின்றன. அத்துடன் பெரிய அமெரிக்க நிறுவனங்களும் இந்த நகரங்களில் இருக்கின்றன. அமெரிக்க உல்லாசப் பயணிகளும் இந்த நகரங்களில் நடமாடுவது அதிகம்.
எனவே, இந்த நகரங்களில் உள்ள அமெரிக்கர்கள் சம்மந்தப்பட்ட கட்டடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க அல்-காய்தா திட்டம் வைத்திருக்கலாம்.
இந்த மாத ஆரம்பத்தில் பீய்ஜிங்கின் தலைமைப் பொலீஸ் மையம் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு எச்சரிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. தீவிரவாத அமைப்புக்களால் அமெரிக்கத் தூதரகமோ அல்லது பீய்ஜிங்கிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களோ தாக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது என்பதுதான் அந்த எச்சரிக்கை.
ஆனால் இந்த எச்சரிக்கை கடிதம் எப்படியோ சீன மீடியாவில் வெளியாகிவிட, சீனாவின் உள்ளகப் பாதுகாப்பு அமைச்சு அதை மறுத்து அறிக்கை விட்டிருந்தது. அத்துடன் அந்த விவகாரம் அமுக்கப்பட்டு உள்ளது. அங்கு சிலீப்பர் செல்களாக உள்ளவர்கள் எப்போதாவது வெளியே வந்து கைவரிசையை காட்டினால்தான், அமெரிக்காவுக்கு இருக்கிறது சிக்கல்.
விறுவிறுப்பு.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக