ஞாயிறு, 22 டிசம்பர், 2013

டைப் 2 நீரிழிவு நோய் - ஒரு பார்வை

டைப் 2 நீரிழிவு நோய் இந்த வயதுக்குட்பட்டவரையோ இந்த வயதுக்கு மேற்பட்டவரையோ தான் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து வயதினரையும் தாக்க கூடிய நோயாகும். டைப் 2 நீரிழிவு நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு தெரியாமலே போகும். கிட்டத்தட்ட டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு தான் இந்நோயால் பாதிக்கபட்டிருப்பது பற்றி தெரிவதே இல்லை.

உடலில் தேவையான ஆற்றலை அளிக்க வல்ல கார்போஹைட்ரேட்டின் வளர் சிதை மாற்றத்தில் தலையிட்டு உடலில் அதிக அளவிலான சர்க்கரை தங்கி விட வழி செய்துவிடுகிறது இந்த நீரிழிவு நோய். இந்த உயர் சர்க்கரை அளவு நரம்பு பிரச்சனைகள், பார்வை கோளாறுகள், இதய நோய்கள் மற்றும் பிற நோய்கள் உருவாக காரணியாகி விடுகிறது.

நீரிழிவு நோயின் எச்சரிக்கைகள்:
1) தாகம்
2) தலைவலி
3) பாலியல் பிறழ்ச்சி

தாகம்

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட எந்த அறிகுறியும் சொல்ல முடியாவிட்டாலும் தாகம் எடுப்பது அதிகரிப்பது ஒரு முக்கியமான அறிகுறியாகும். தாகம் அதிகரிப்பதால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, வாய் உலர்ந்து போதல், மற்றும் உடல் எடை அதிகரிப்பு/இழப்பு போன்ற பக்கவிளைவுகளும் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

தலைவலி

உயர் இரத்த அளவினால் சோர்வு, மங்கலான பார்வை மற்றும் தலைவலி போன்றவைகளும் உண்டாகும்.

நோய்த்தொற்றுகள்

டைப் 2 நீரிழிவு நோய் உடலின் அதன் நோய் தாக்கம் வெளிப்படையாக தெரிந்த பின்னரே அறியப்படுகிறது. நாள்பட்ட காயம் மற்றும் புண்கள் டைப் 2 நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறி. பிற அறிகுறிகள் அடிக்கடி ஈஸ்ட் தொற்று அல்லது சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் நமைச்சல் ஆகியவையும் அடங்கும்.


பாலியல் பிறழ்ச்சி

டைப் 2 நீரிழிவு நோயின் விளைவாக பாலியல் பிரச்சனைகள் ஏற்படலாம். நீரிழிவு நோய் பாலியல் உறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை தாக்குவதால் உணர்ச்சியற்ற நிலை ஏற்பட்டு உறவு கொள்ளும் போது உச்சத்தை அடைய முடியாத நிலை ஏற்படலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் பலவீனம் ஏற்படுவதும் நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 35 முதல் 70 சதவீதம் வரையிலானவர்களுக்கு பாலியல் குறைப்பாடு ஏற்படுகிறது என்றும் பெண்களுக்கு மூன்றில் ஒருவருக்கு பாலியல் குறைபாடு ஏற்படுகிறது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தடுக்க கூடிய அபாயங்கள்

வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ நிலைக்கு தொடர்பான சில காரணிகள் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிவிடுகின்றன. அதில் புகைப்பிடித்தல், அதிக உடல் எடை / உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட கறி, கொழுப்பு, இனிப்பு மற்றும் சிகப்பு இறைச்சிகள் கொண்ட உணவை உட்கொள்ளுதல், 250mg/dL அளவை காட்டிலும் அதிகமான ட்ரை கிளிசரைடுகள், குறைந்த அளவிலான நல்ல கொழுப்பு (35mg/dL அளவை காட்டிலும் குறைவாக) எடுத்துக் கொள்வது போன்றவை.

தடுக்க முடியாத அபாயங்கள்

நீரிழிவு நோய் ஏற்படுத்தும் சில காரணிகளை நாம் தடுக்க முடியாது. ஸ்பானியர்கள், பூர்வீக அமெரிக்கர்கள், ஆசியர்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஆகியோருக்கு சராசரியை காட்டிலும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இளைஞர்களை காட்டிலும் 45 வயதுக்கு அதிகம் ஆனவருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து அதிகம் உள்ளது.

பெண்களுக்கான அபாய காரணிகள்

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் டைப் 2 நீரிழிவு நோயாக உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளது. குழந்தையின் எடை 9 பவுண்டுக்கும் அதிகமாக கொண்ட தாய்மார்களுக்கும் இதே நிலை தான். பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் நோய்க்கு தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பும் பெண்களிடையே இந்த நிலையை உருவாக்கி விடுகிறது.

இன்சுலின் எவ்வாறு வேலை செய்கிறது?

உடலில் உள்ள குளுக்கோஸை உடலுக்கு தேவையான எரிபொருளாக மாற்றுவது இன்சுலின் என்னும் ஹார்மோன். உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் வயிற்றில் சர்க்கரையாக மாறும் போது, குளுக்கோஸ் இரத்த சுழற்சியில் நுழைந்து கணையம் (Pancreas ) சரியான அளவில் இன்சுலின் சுரக்க வழி செய்கிறது. இன்சுலின் உடலில் உள்ள அணுக்கள் குளுக்கோஸை எடுத்து கொண்டு ஆற்றலாக மாற்றி கொள்ள உதவுகிறது.

டைப் 2 நீரிழிவு:

இன்சுலின் எதிர்ப்பு டைப் 2 நீரிழிவு நோயால் உடல் அணுக்கள் இரத்தத்தில் இருந்து சரியான குளுக்கோஸ் அளவை எடுத்து கொள்ள முடியாது, அதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகம் ஆகிவிடும்.இன்சுலின் எதிர்ப்பு என்றால் உடல் சரியான அளவில் குளுக்கோஸை உற்பத்தி செய்தாலும் உடல் அணுக்களால் சரியான அளவில் இன்சுலினை கிரகித்து கொள்ள முடியாது. காலப்போக்கில் கணையமும் (Pancreas) இன்சுலின் உற்பத்தியை மட்டுபடுத்திவிடும்.

உணவு

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது நீரிழிவு சிக்கல்கள் ஆபத்தை குறைக்கும். மருத்துவரே பொதுவாக ஆரோக்கியமான உணவு திட்டத்தை உருவாக்க ஊட்டசத்து நிபுணரிடம் பரிந்துரைப்பார்.டைப் 2 நீரிழிவு நோய் கொண்டிருப்பவர் கார்போஹைட்ரேட் உட்கொள்ளுதலை குறைத்து கொள்ளுதல் அவசியம். கொழுப்பு மற்றும் புரத அளவுகளை கவனித்து கொள்ளுதல் பரிந்துரைக்க தக்கது.

உடற்பயிற்சி

நடைபயிற்சி உட்பட நாள்தோறும் செய்யும் உடற்பயிற்சி உடலில் சர்க்கரை அளவை குறைக்கும். உடல் செயல்பாடுகள் கொழுப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைத்து இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் 30 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது.

மன அழுத்தம் குறைத்தல்

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் தான் மிகவும் கவலைக்குரியது. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் மனதை அமைதிபடுத்த கற்று வைத்திருக்க வேண்டும்.

மருந்துகள்

உணவு மட்டும் உடற்பயிற்சியால் இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த முடியாத நீரிழிவு நோயாளிகள் மருந்துகள் உட்கொள்ளலாம். இவ்வகை மருந்துகள் நிறைய உள்ளன. சில மருந்துகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும், சில உடல் இன்சுலின் எடுத்து கொள்ளும் திறனை அதிகரிக்கும், மேலும் சில ஸ்டார்ச் (Starch ) செரிமானத்தை மட்டுபடுத்தும்.

இன்சுலின்

டைப் 2 நோயாளிகள் சிலர் வாய் வழி மருந்துகளுடன் சேர்த்து இன்சுலினையும் எடுத்து கொள்வர். அதிக இரத்த சர்க்கரையால் கணையம் இன்சுலின் உற்பத்தியை நிறுத்தியிருந்தாலும் இன்சுலின் எடுத்து கொள்வது சிறந்தது. இன்சுலின் உற்பத்தி சுத்தமாக இல்லாவிடில் இன்சுலின் சிகிச்சை மிக அவசியம்.

இரத்த குளுக்கோஸை பரிசோதித்தல்

நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்களே எப்பொழுதெல்லாம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைப்பர். இப்படி பரிசோதிப்பதால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறதா என்றும் அல்லது கட்டுப்பாடு திட்டங்களை மாற்ற வேண்டுமா என்றும் அறிந்து கொள்ளலாம். இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க தகுந்த நேரங்கள்: விழித்ததும், உணவுக்கு முன்/பின், உடல் செயல்பாடுகளுக்கு பின் அல்லது இரவு நேரம்.

இரத்த நாளங்கள் - நீண்ட காலம் சேதம்

நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் இதய நோயால் இறக்கின்றனர். காலப்போக்கில் உயர் சர்க்கரை அளவு இரத்த நாளங்களை சேதப்படுத்தி அடைப்பு ஏற்பட காரணியாகி விடுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த நாளங்கள் சேதம் அடைவதால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சிறுநீரகங்கள் - நீண்ட கால சேதம்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நாள்பட நாள்பட சிறுநீரக பிரச்சனைகள் உண்டாகும். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட நீரிழிவு நோய் தான் 44% காரணமாக உள்ளது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுக்க வாய் வழி மருந்துகளும் உட்கொள்ளலாம்.

கண்கள் - நீண்ட கால சேதம்

நீரிழிவு நோயால் ஏற்படும் உயர் இரத்த சர்க்கரை அளவு கண்களில் ஓடும் நுண்ணிய இரத்த நாளங்களை பாதிப்பதால் விழித்திரை சேதமடைந்து விடும். இது நிரந்தர பார்வை இழப்பை கூட ஏற்படுத்திவிடும். இதுவே 20 முதல் 74 வயதுகுட்பட்டவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட காரணம் ஆகி விடுகிறது.

நரம்பு வலி - நீண்ட கால சேதம்

கூச்சம், உணர்வின்மை, ஊசிகள் கண்டு உணர்ச்சிவயப்படுதல் நீரிழிவு நோய் சம்பந்தமான நரம்பு நோய்கள் ஆகும். இது பரவலாக உடலில் கைகள், கால்கள், விரல்கள் மற்றும் கால் விரல்களில் தான் காணப்படும். இந்த சிக்கலை போக்க நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

கால் - நீண்ட கால சேதம்

இரத்த நாளங்கள் சேதமடைவதால் கால்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும். ஆகவே கால்களில் ஏற்படும் புண்கள் குணமாக நாள் ஆகும். சில நேரங்களில் கால்களில் ஊனம் ஏற்பட கூட இது காரணமாக அமைந்து விடும்.

டைப் 2 நீரிழிவு நோய் தடுத்தல்

டைப் 2 நீரிழிவு நோய் பல வழிகளில் தடுக்க கூடியவையே. குறைந்த பட்சம் ஆரோக்கியமான உணவு உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் சரியாக உடல் எடையை பராமரித்தல் நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களை தடுக்க வழி செய்யும்.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல